சினிமா செய்திகள்

ராதாரவி, என்னை மிரட்டினார் - பாடகி சின்மயி + "||" + Radaravi, threatened me - singer Chinmayi

ராதாரவி, என்னை மிரட்டினார் - பாடகி சின்மயி

ராதாரவி, என்னை மிரட்டினார் - பாடகி சின்மயி
நடிகர் ராதாரவி தன்னை மிரட்டியதாக, பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.
கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடலை பாடி பிரபலமான சின்மயி தொடர்ந்து பல படங்களில் பாடி வந்தார். வாகை சூடவா படத்தில் பாடிய சரசர சாரக்காற்று வீசும்போது சாரப்பார்த்து பேசும்போது சாரப்பாம்பு போல நெஞ்சு சத்தம் போடுது பாடல் மேலும் அவரை பிரபலபடுத்தியது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த படங்களில் அதிகமாக பாடினார்.


நடிகைகளுக்கு பின்னணி குரலும் கொடுத்து வந்தார். சமீபத்தில் திரைக்கு வந்த 96 படத்தில் திரிஷாவுக்கு குரல் கொடுத்து இருந்தார். இந்த நிலையில் பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இரு தினங்களுக்கு முன்பு திரைப்பட டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து சின்மயியை நீக்கினர். இந்த சங்கத்தின் தலைவராக ராதாரவி பொறுப்பு வகிக்கிறார்.

இந்த நிலையில் சின்மயி பாடியுள்ள அடுத்த பாடல் வெளியாக இருப்பதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் “ஏ.ஆர்.ரகுமான் இசையில் ‘சர்வம் தாள மயம்’ படத்தில் நான் பாடிய மாயா மாயா மன்மோகனா பாடல் அடுத்து வெளியாகப் போகிறது” என்று தெரிவித்து உள்ளார்.

மேலும் சின்மயி கூறும்போது, “மீ டூ வில் குரல் கொடுத்ததால் என்னை டப்பிங் யூனியனில் இருந்து நீக்கி உள்ளனர். எதிர்த்து பேசியவர்களை ராதாரவி நீக்கி விடுவார். ஏற்கனவே எனக்கு ரெட் போடுவதாகவும் மிரட்டினார். சங்கத்துக்கு 2 வருடம் சந்தா கட்டவில்லை என்று என்மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுகுறித்து எனக்கு முன் அறிவிப்பு எதுவும் வரவில்லை” என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஒத்தி பணத்தை கொடுக்காமல் வீட்டை காலி செய்யக்கூறி மிரட்டியதால் அதிர்ச்சியில் முதியவர் சாவு - மயிலாடுதுறையில் பரிதாபம்
மயிலாடுதுறையில் ஒத்தி பணத்தை கொடுக்காமல் வீட்டை காலி செய்யக் கூறி மிரட்டியதால் அதிர்ச்சியில் முதியவர் இறந்தார்.
2. போலீஸ் போல் நடித்து என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களை தாக்கி நகை, செல்போன்கள் பறிப்பு; ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டல்
போலீஸ் போல் நடித்து என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களை வீடு புகுந்து தாக்கி நகை, செல்போன்களை பறித்து சென்றதுடன், ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
3. தாசில்தார் கண்டித்ததால் ஆமூர் கிராம நிர்வாக அதிகாரி தற்கொலை மிரட்டல்
தாசில்தார் கண்டித்ததால் ஆமூர் கிராம நிர்வாக அதிகாரி தற்கொலை மிரட்டல்.
4. பள்ளிபாளையம் அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வாலிபர் கைது
பள்ளிபாளையம் அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
5. குடும்ப பிரச்சினை காரணமாக மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி
குடும்ப பிரச்சினை காரணமாக, மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியால் திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது.