சினிமா செய்திகள்

தனது 75 வயதில் மூன்றாவது மனைவியை விவாகரத்து செய்யும் பிரபல நடிகர் + "||" + Splitting—Again: The Ups and Downs of Robert De Niro & Grace Hightower’s 21-Year Marriage

தனது 75 வயதில் மூன்றாவது மனைவியை விவாகரத்து செய்யும் பிரபல நடிகர்

தனது 75 வயதில் மூன்றாவது மனைவியை விவாகரத்து செய்யும் பிரபல நடிகர்
தனது 75 வயதில் மூன்றாவது மனைவியை விவாகரத்து செய்கிறார் ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நீரோ.
லாஸ் ஏஞ்சல்ஸ்,

'ஒன்ஸ் அபான் டைம் இன் அமெரிக்கா', 'காட் ஃபாதர்', ஸ்கார்ஃபேஸ்'' ரோனின்', த மிஷன்', 'ஏஞ்சல் ஹார்ட்' உளபட பல ஹாலிவுட் படங்களில் நடித்தவர்  ராபர்ட் டி நீரோ. 

ராபர்ட் டி நீரோ 1987-ம் ஆண்டு, லண்டனில் 'மிஸ்டர் சவு' என்ற உணவகத்தில் பணியாற்றி வந்த கிரேஸை சந்தித்தார். இருவரும் அடுத்த 10 வருடங்கள் காதலர்களாக இருந்தனர். 1997-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு எல்லியட் (20) என்ற மகனும், ஹெலன் கிரேஸ் (6) என்ற மகளும் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்தனர். இப்போது இவர்கள் இருவரும் பிரிய முடிவெடுத்திருப்பாக செய்திகள் வந்துள்ளன. அடுத்த ஒரு வாரத்துக்குள் அதிகாரப்பூர்வமாக இதை அவர்கள் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இச்செய்தியை பல ஹாலிவுட் பத்திரிகைகள் உறுதி செய்துள்ளன.

இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆன அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே டி நீரோ விவாகரத்து செய்ய முடிவெடுத்தார். ஆனால் அப்போதைய பிரச்சினை பேசி தீர்க்கப்பட்டது. தற்போது நீரோவுக்கு வயது 75, கிரேஸுக்கு 63. நீரோவுக்கு ஏற்கெனவே டையான் அபோட் என்பவருடன் மணமாகி விவாகரத்தாகியுள்ளது. மேலும் டூகி ஸ்மித் என்பவருடனும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் விவேக்கின் தாயார் காலமானார்!
நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் (வயது 86) இன்று மாரடைப்பால் சென்னையில் காலமானார்.
2. லீக்கான விஜய்யின் 'பிகில்' பாடல்: அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிகில் படத்தின் இண்ட்ரோ பாடல் இணையத்தில் வெளியாகிப் படக்குழுவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
3. 'லிப் லாக்' முத்தம் கொடுத்தால் என்ன தவறு - நடிகை அமலாபால்
ஒரு தோழி இன்னொரு தோழிக்கு 'லிப் லாக்' முத்தம் கொடுத்தால் என்ன தவறு என நடிகை அமலாபால் கேள்வி எழுப்பி உள்ளார்.
4. நடிகை ஸ்ரீதேவி கொல்லப்பட்டாரா? முட்டாள்தனமான கதைகளுக்கு பதில் சொல்ல மாட்டேன் - போனி கபூர் பாய்ச்சல்
நடிகை ஸ்ரீதேவி கொல்லப்பட்டாரா? என கேரள டிஜிபி ரிஷிராஜ் சிங் புதிய சர்ச்சையைக் கிளப்பினார். இதுபோன்ற முட்டாள்தனமான கதைகளுக்கு பதில் சொல்ல மாட்டேன் என போனி கபூர் கூறி உள்ளார்.
5. நான் ஒரு தமிழ் பெண் என்பதால் இங்கு என்னை துன்புறுத்துகிறார்கள் - நடிகை விஜயலட்சுமி கதறல்
நான் ஒரு தமிழ் பெண் என்பதால் இங்கு என்னை துன்புறுத்துகிறார்கள் என்று நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.