சினிமா செய்திகள்

விவாகரத்து செய்யாமல் 2-வது திருமணம் கன்னட நடிகர் துனியா விஜய் மீது முதல் மனைவி புகார் + "||" + Without divorcing 2nd marriage Kannada actor On the Duniya Vijay First wife complains

விவாகரத்து செய்யாமல் 2-வது திருமணம் கன்னட நடிகர் துனியா விஜய் மீது முதல் மனைவி புகார்

விவாகரத்து செய்யாமல் 2-வது திருமணம் கன்னட நடிகர் துனியா விஜய் மீது முதல் மனைவி புகார்
விவாகரத்து செய்யாமல் 2-வது திருமணம் செய்த கன்னட நடிகர் துனியா விஜய் மீது முதல் மனைவி புகார் அளித்துள்ளார்.
பிரபல கன்னட நடிகர் துனியா விஜய். இவருக்கு நாகரத்னா என்ற மனைவியும் மோனிகா என்ற 19 வயது மகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2016-ல் கீர்த்தி என்பவரை காதலித்து 2-வது திருமணம் செய்து அவருடன் பெங்களூருவில் உள்ள கிரி நகரில் வசித்து வருகிறார். இதனால் 2 மனைவிகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சமீபத்தில் துனியா விஜய் வீட்டில் இல்லாதபோது முதல் மனைவி நாகரத்னா மகளுடன் சென்று கீர்த்தியுடன் சண்டை போட்டார்.


இருவரும் தலைமுடியை பிடித்து ஆவேசமாக மோதினார்கள். இதில் கீர்த்தி தலையை பிடித்து சுவற்றில் அடித்து காயப்படுத்தியதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து போலீசில் கீர்த்தி புகார் செய்தார். 2-வது மனைவியை தாக்கியதால் மகள் மோனிகாவை துனியா விஜய் அடித்ததாக கூறப்பட்டது. அவர் மீது மோனிகா போலீசில் புகார் அளித்தார்.

இதனால் துனியா விஜய் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் கைதாகலாம் என்ற பரபரப்பு நிலவியது. இந்த நிலையில் மகளிர் கமிஷனில் துனியா விஜய் மீது முதல் மனைவி நாகரத்னா புகார் அளித்துள்ளார். “என்னை விவாகரத்து செய்யாமல் துனியா விஜய் 2-வது திருமணம் செய்தது தவறு. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார். தனக்கு வீடும், பணமும் தரவேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளார்.