சினிமா செய்திகள்

ரசிகர்கள் எதிர்ப்பு : ரஜினியை பாடகர் சீனிவாஸ் விமர்சித்தாரா? + "||" + Fans Resistance: Singer Srinivas criticized Rajini?

ரசிகர்கள் எதிர்ப்பு : ரஜினியை பாடகர் சீனிவாஸ் விமர்சித்தாரா?

ரசிகர்கள் எதிர்ப்பு : ரஜினியை பாடகர் சீனிவாஸ் விமர்சித்தாரா?
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது.
பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர்–நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பலரும் ரஜினியை பாராட்டி பேசினார்கள். படத்தில் அவருடன் நடித்த அனுபவங்களையும் பகிர்ந்தனர். 

இந்த நிலையில் பேட்ட படவிழா குறித்து பின்னணி பாடகர் சீனிவாஸ் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு ரஜினிகாந்தை விமர்சித்ததாக சர்ச்சைகள் கிளம்பின. ‘‘இசை வெளியீட்டு விழாக்களில் இப்போதெல்லாம் இசைக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விட்டது’’ என்று அவர் பதிவிட்டு இருந்தார். 

பேட்ட விழாவில் ரஜினியை மற்றவர்கள் பாராட்டி பேசியதைத்தான் மறைமுகமாக அவர் விமர்சித்து இருப்பதாக கருதி ரசிகர்கள் கண்டித்தனர். இதனால் சமூக வலைத்தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தனது கருத்துக்கு சீனிவாஸ் மீண்டும் டுவிட்டரில் விளக்கம் அளித்தார். 

அதில் அவர் கூறும்போது, ‘‘நான் பேட்ட படம் பற்றி எதுவும் பேசவில்லை. ரஜினி படம் என்றால் ரஜினி மட்டுமே கவனத்தை ஈர்ப்பவராக இருப்பார். அதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனாலும் இசை வெளியீட்டு விழாக்கள் என்பது இசை மற்றும் இசைக்கலைஞர்களை பற்றியதாக இருக்க வேண்டும். அந்த வகையில் கவுதம் மேனனின் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படம்தான் முறையாக நடந்த கடைசி இசை வெளியீட்டு விழா’’ என்றார். சீனிவாஸ் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்புகளும் கிளம்பி உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திப்பேன் - நடிகர் ரஜினிகாந்த்
சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
2. இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், வினோத் இயக்கத்தில் மேலும் 2 படங்களில் நடிக்க ரஜினிகாந்த் முடிவு?
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசத்தை தள்ளி வைத்துவிட்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘தர்பார்’ படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக வருகிறார்.
3. ரஜினியின் கருத்தை ஏன் அரசியலாக்க வேண்டும்? -குஷ்பு டுவிட்டரில் விமர்சனம்
ரஜினியின் கருத்தை ஏன் அரசியலாக்க வேண்டும்? என்று நடிகை குஷ்பு டுவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார்.
4. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது
5. படப்பிடிப்புக்கு பணம் கொடுப்பதில் சிக்கல் : தேர்தலால் தாமதமாகும் ரஜினிகாந்த் படம்
ரஜினிகாந்த் சட்டமன்ற தேர்தலை குறிவைத்துள்ளதால் அவரது அரசியல் பிரவேசம் தள்ளிப்போகிறது. இதற்கிடையில் 2 புதிய படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார்.