சினிமா செய்திகள்

"நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும்” ரஜினிகாந்திற்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து + "||" + Happy birthday to Rajinikanth Kamal Haasan ‏

"நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும்” ரஜினிகாந்திற்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து

"நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும்” ரஜினிகாந்திற்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து
"நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும்” என்று நடிகர் ரஜினிகாந்திற்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்திற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

திரையுலக சூப்பர் ஸ்டாரும், அருமை நண்பருமான ரஜினிகாந்த்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

இதேபோல மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

எப்போதும் பரபரப்பான மனிதராக வலம் வரும் ரஜினியை வாழ்த்திக் கொள்வதாக பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

என் பல ஆண்டு நண்பர், சக மாணவர், சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் என பதிவிட்டுள்ளார்.