சினிமா செய்திகள்

ரூ.2 கோடியில் தயாராகும் அரங்கு அடுத்த மாதம் ‘இந்தியன்–2’ படப்பிடிப்பு + "||" + 'Indian-2' shooting next month is set for Rs 2 crore

ரூ.2 கோடியில் தயாராகும் அரங்கு அடுத்த மாதம் ‘இந்தியன்–2’ படப்பிடிப்பு

ரூ.2 கோடியில் தயாராகும் அரங்கு அடுத்த மாதம் ‘இந்தியன்–2’ படப்பிடிப்பு
கமல்ஹாசன் நடித்து 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இந்தியன்-2 என்ற பெயரில் தயாராகிறது. ‌ஷங்கர் டைரக்டு செய்கிறார்.
இந்தியன்-2  படத்திலும் கமல்ஹாசன் முதியவராகவும் இளமை தோற்றத்திலும் இரு வேடங்களில் நடிக்கிறார்.

முதல் பாகத்தில் இந்தியன் தாத்தா வேடத்துக்கு வரவேற்பு கிடைத்தது. இரண்டாம் பாகத்திலும் முதியவர் தோற்றத்துக்கு முக்கியத்துவம் அளித்து திரைக்கதையை உருவாக்கி உள்ளனர். ஹாலிவுட் மேக்கப் கலைஞர்கள் கமல்ஹாசனை வயதான தோற்றத்துக்கு மாற்றி படம் எடுத்தனர். அந்த தோற்றம் அவருக்கு மீண்டும் கச்சிதமாக பொருந்தி இருப்பதாக ‌ஷங்கர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


சென்னையில் நேற்று (14-ந்தேதி) படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் ஜனவரிக்கு தள்ளி வைத்துள்ளனர். பொள்ளாச்சியிலும் பெரும்பகுதி படப்பிடிப்பை நடத்துகின்றனர். அரங்குகள் அமைக்கும் பணி நடக்கிறது. ரூ.2 கோடி செலவில் பிரமாண்ட அரங்கை அமைத்து வருகிறார்கள். 2 நிமிட காட்சிக்காக இந்த அரங்கை அமைப்பதாக தகவல் கசிந்துள்ளது.

இந்தியன்-2 முழு அரசியல் படமாக இருக்கும் என்று கமல்ஹாசன் ஏற்கனவே கூறியுள்ளார். 2.0 படத்தைபோல் இந்தியன்–2 படத்தையும் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாக்க ‌ஷங்கர் திட்டமிட்டு உள்ளார்.  இந்த படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.