சினிமா செய்திகள்

விஸ்வாசம் படத்தின் 2வது சிங்கிள் டிராக் வெளியீடு + "||" + Vishwamam 2nd Single Track release

விஸ்வாசம் படத்தின் 2வது சிங்கிள் டிராக் வெளியீடு

விஸ்வாசம் படத்தின்  2வது சிங்கிள் டிராக் வெளியீடு
‘விஸ்வாசம்’ படத்தில் இருந்து வெளியான அடிச்சு தூக்கு பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இரண்டாவது சிங்கிள் டிராக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.
சென்னை,

வீரம், வேதாளம், விவேகம் படங்களுக்கு பிறகு 4-வது முறை ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித்தும், சிவாவும் இணைந்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இந்தப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. அஜித்துக்காக முதன்முதலாக டி.இமான் இசையமைக்கிறார். விஸ்வாசம் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில். தொடர்ந்து படம் குறித்த பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. 


விஸ்வாசம் படத்தில் இடம்பெறும் `அடிச்சு தூக்கு' என்ற பாடல் கடந்த 10ம் தேதி வெளியாகி உலகளவில் டிரெண்ட் ஆன நிலையில், இரண்டாவது சிங்கிள் டிராக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘வேட்டிகட்டு’என தொடங்கும் பாடலை இன்று இரவு 7 மணிக்கு படக்குழு வெளியிட்டது.  அந்த பாடலை ஷங்கர் மகாதேவன் பாடியுள்ளார். இதனை ரசிகர்கள் டிரெண்ட் ஆக்கி வருகிறார்கள்.

மதுரை பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் அஜித் தூக்கு துரை என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அஜித் ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரஜினிகாந்தின் பேட்ட படமும் பொங்கலுக்கு வருவதால் இரண்டு படங்களும் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.