சினிமா செய்திகள்

கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா + "||" + Nayantara who celebrated Christmas

கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா

கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா
நயன்தாரா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். இவரது உண்மையான பெயர் டயானா மரியம் குரியன்.
பிரபுதேவாவுடன் காதலில் இருந்தபோது அவரை திருமணம் செய்து கொள்ள இந்து மதத்துக்கு மாறியதாக கூறப்பட்டது. ஆனால் திருமணம் நடக்கவில்லை. இப்போது டைரக்டர் விக்னேஷ் சிவனை காதலிக்கிறார்.

இருவரும் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றி புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர். அனைத்து கோவில்களுக்கும் செல்கிறார்கள். சமீபத்தில் அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு தரையில் உட்கார்ந்து உணவும் சாப்பிட்டார்கள்.


இந்த நிலையில் தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய படங்களையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர். ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில் வெளியிட்ட இந்த படங்கள் வைரலாகி வருகின்றன. நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருமணம் செய்துகொள்ளாமலேயே சேர்ந்து வாழ்வதாக கூறப்படுகிறது.

விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று ரசிகர்கள் வலைத்தளத்தில் வற்புறுத்தி வருகிறார்கள். நயன்தாராவுக்கு இந்த வருடம் கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள், தெலுங்கில் ஜெய்சிம்மா ஆகிய படங்கள் வந்தன. அடுத்த வருடம் விஸ்வாசம், ஐரா, கொலையுதிர்காலம், தெலுங்கில் சைரா நரசிம்ம ரெட்டி, மலையாளத்தில் ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ ஆகிய 5 படங்கள் வெளிவர உள்ளன. தமிழில் ஒரு புதிய படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளா வெள்ள சேதத்துக்கு நடிகை நயன்தாரா ரூ.10 லட்சம் உதவி சிவகார்த்திகேயனும் ரூ.10 லட்சம் கொடுத்தார்
கேரள மழை-வெள்ள பாதிப்புக்கு நடிகை நயன்தாரா ரூ.10 லட்சமும், சிவகார்த்திகேயனும் ரூ.10 லட்சமும் வழங்கினார்கள்.