சினிமா செய்திகள்

படமாகும் வாழ்க்கை கதை : அப்துல்கலாம் வேடத்தில், அனில்கபூர்? + "||" + The life story of the film : Abdul Kalam's role, Anil Kapur?

படமாகும் வாழ்க்கை கதை : அப்துல்கலாம் வேடத்தில், அனில்கபூர்?

படமாகும் வாழ்க்கை கதை : அப்துல்கலாம் வேடத்தில், அனில்கபூர்?
நடிகர்-நடிகைகள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படங்கள் அதிகம் தயாராகின்றன.
நடிகைகள் சில்க் சுமிதா, சாவித்திரி, இந்தி நடிகர் சஞ்சய்தத், கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், டோனி, குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று படங்கள் ஏற்கனவே வந்தன.

இவற்றுக்கு நல்ல வரவேற்பும் வசூலும் கிடைத்தது. இப்போது மறைந்த ஆந்திர முதல் மந்திரிகள் என்.டி.ராமராவ், ராஜசேகர ரெட்டி மற்றும் பால்தாக்கரே ஆகியோரின் வாழ்க்கை படமாகி வருகிறது. மறைந்த முதல்–அமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வாழ்க்கையையும் படமாக்குகின்றனர்.


பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால், துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா, மகளிர் கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் மிதாலிராஜ் ஆகியோரின் வாழ்க்கையும் படமாகிறது. மிதாலி ராஜ் வேடத்தில் டாப்சி நடிக்க பேசி வருகின்றனர். டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பேட் மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் வாழ்க்கையும் படமாகிறது.

விஞ்ஞானி நம்பிநாராயணன் வாழ்க்கை சினிமா படமாகி வருகிறது. இதில் மாதவன் நடிக்கிறார். இந்த வரிசையில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வாழ்க்கையும் சினிமா படமாகிறது. இதை தெலுங்கு பட அதிபர்கள் அனில் சுன்கரா, அபிஷேக் அகர்வால் ஆகியோர் தயாரிக்கின்றனர். இந்த படத்தில் அப்துல்கலாம் வேடத்தில் பிரபல இந்தி நடிகர் அனில்கபூரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கலாம் பிறந்த நாளை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க கோரிக்கை
அப்துல் கலாம் பிறந்த நாளை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க கோரி மத்திய அமைச்சருக்கு பா.ஜனதா முன்னாள் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.