சினிமா செய்திகள்

ரஜினியின் 'பேட்ட' படத்தின் டிரெய்லர் எப்படி உள்ளது? + "||" + Rajini's 'Petta' movie How is the trailer

ரஜினியின் 'பேட்ட' படத்தின் டிரெய்லர் எப்படி உள்ளது?

ரஜினியின் 'பேட்ட' படத்தின் டிரெய்லர் எப்படி உள்ளது?
ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படத்தின் டிரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 'பேட்ட' படத்தின் டிரெய்லர் இன்று காலை வெளியானது. படத்தில் விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக் உள்ளிட்டோர் வில்லன்களாகவும், சிம்ரன், திரிஷா ரஜினிக்கு ஜோடியாகவும் நடித்துள்ளனர். சசிகுமார் ரஜினியின் நண்பராகவும், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், சனத் ரெட்டி கல்லூரி மாணவர்களாகவும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தணிக்கை குழுவில் இந்த படத்துக்கு ‘யுஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதன் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. படத்தின் டிரெய்லரை ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இன்று வெளியாகும் என்று பட நிறுவனம் அறிவித்து இருந்தது. அதன்படி  இன்று காலை 10.25-க்கு டிரெய்லர் வெளியானது. 

இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஏற்கனவே ரஜினியின் தோற்றங்கள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டன. அதில் இளமையாக இருந்தார். வேட்டி சட்டையிலும் ஒரு தோற்றம் இருந்தது. இந்த படத்தின் கதை மற்றும் கதாபாத்திரம் பற்றி சமூக வலைத்தளங்களில் பல்வேறு யூகங்கள் பரவி வருகின்றன. 

ரஜினி விடுதி வார்டனாக நடிக்கிறார் என்றும், பயங்கரவாதிகளுக்கு எதிராக அவர் போராடுவதுதான் கதை என்றும் கூறப்பட்டது. இன்னும் சிலர் தமிழகத்தில் நடக்கும் ஆணவ கொலைகளே படத்தின் கதை என்றனர். 

பேட்ட இந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பில் உள்ளது.

டிரெய்லர்  ஆரம்பத்திலேயே காளி என்ற ஹாஸ்டல் வார்டனை பற்றி ஒரு கேங் பேசுகின்றது.

சிம்ரனுடன் ரொமான்ஸ், இளைஞர்களுடன் ஆட்டம், பாட்டம்,

ஏய் எவனுக்காவது பொண்டாட்டி, புள்ள குட்டி என்ற செண்டிமென்ட் இருந்தா அப்படியே ஓடிபோய்டு. செம காண்டுல இருக்கேன், மவனே கொல்லாம விட மாட்டேன் என்று ரஜினி பேசும் வசனம் இடம்பெறுகிறது.

‘சத்தியமா சொல்றேன், அடிச்சு அண்டர்வேர அவுத்துவிட்ருவேன், அப்புறம் மானம் போச்சுன்னு சொல்லக்கூடாது’ என்ற  மாஸ் வசனங்களுடன் டிரெய்லர் உள்ளது.

பார்க்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த, ஸ்டைலா இருக்கேனா நேச்சுரலி, சிறப்பான, தரமான சம்பவங்கள இனிமேல் தான் பாக்க போற... என ரஜினி பேசும் மாஸான பஞ்ச் வசனங்களுக்கு தியேட்டரில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

அதிலும் மதுரை பேக்ரவுண்டில் ரஜினி ஆடிக்கொண்டே வரும் கடைசி காட்சி , கண்டிப்பாக நீண்ட நாள் காத்திருந்த ரஜினி ரசிகர்களுக்கு விருந்து தான்.


தொடர்புடைய செய்திகள்

1. கேம் ஆஃப் த்ரோன்ஸ் 8-வது சீசனின் முதல் எபிசோட் வெளியானது - ட்ரெண்டிங்கில் முதலிடம்
இன்று வெளியான ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ ஆங்கிலத் தொடரின் 8-வது சீசனின் முதல் எபிசோட் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் உலக அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது.
2. தவறாக நடந்து கொண்ட வாலிபர் கன்னத்தில் அறைந்த குஷ்பு
தவறாக நடந்து கொண்ட வாலிபர் கன்னத்தில் அறைந்த குஷ்பு வைரலாகும் வீடியோ.
3. இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள்- திரை உலக பிரபலங்கள் இரங்கல்
இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள்- திரை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
4. குடிபோதையில் போலீஸ்காரர்களை தாக்கிய நடிகை
குடிபோதையில் போலீஸ்காரர்களை தாக்கிய மும்பை டிவி நடிகை ரூகி சிங் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
5. ராதாரவி சர்ச்சை பேச்சு: தனக்கு ஆதரவு அளித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி - நயன்தாரா
தன்னை குறித்து ராதாரவி தவறாக பேசிய விவகாரத்தில் தனக்கு ஆதரவு அளித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி என நடிகை நயன்தாரா தெரிவித்து உள்ளார்.