சினிமா செய்திகள்

படத்தை கைவிடவில்லை: 18-ந் தேதி கமலின் இந்தியன்-2 படப்பிடிப்பு + "||" + Did not give up Film: Kamal Indian-2 shooting on 18th jan

படத்தை கைவிடவில்லை: 18-ந் தேதி கமலின் இந்தியன்-2 படப்பிடிப்பு

படத்தை கைவிடவில்லை: 18-ந் தேதி கமலின் இந்தியன்-2 படப்பிடிப்பு
கமல்ஹாசனின் இந்தியன்-2 படப்பிடிப்பு, வரும் 18-ந் தேதி தொடங்க உள்ளது.

1996-ல் வெளியாகி வசூல் குவித்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் கமல்ஹாசன்-காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்க தயாராகிறது. ஷங்கர் டைரக்டு செய்கிறார். திரைக்கதை, வசனம் எழுதும் பணிகள் முடிந்துள்ளன. படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்களையும் தேர்வு செய்துவிட்டனர்.

கடந்த மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு தள்ளி வைத்தனர். நேற்று சமூக வலைத்தளங்களில் இந்தியன்-2 படம் கைவிடப்பட்டதாக தகவல் பரவியது. படக்குழுவினர் இதனை மறுத்தனர். இந்தியன்-2 படப்பிடிப்பு வருகிற 18-ந் தேதி தொடங்கும் என்றும் அறிவித்து உள்ளனர். இதற்காக பொள்ளாச்சியில் அரங்கு அமைத்து உள்ளனர். கமல்ஹாசன் சில வாரங்கள் அங்கு முகாமிட்டு படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார்.

சிம்பு கவுரவ தோற்றத்தில் வருகிறார். தனக்கு முக்கியத்துவம் கொடுத்து கதையை மாற்றவேண்டாம் என்றும் கதைக்கு என்ன தேவையோ அது இருந்தால் போதும் என்றும் பெருந்தன்மையுடன் அவர் சொன்னதாக படக்குழுவினர் கூறுகிறார்கள். முதல் பாகத்தில் நடித்த நெடுமுடி வேணு சி.பி.ஐ. அதிகாரியாக வருகிறார்.

இந்தியன் முதல் பாகம் கிளைமாக்சை 80 வயது முதியவராக வரும் கமல்ஹாசன் விபத்தில் சிக்கி மாயமாவது போன்றும் வெளிநாட்டில் இருந்து அவர் போன் செய்வது போன்றும் முடித்து இருந்தனர்.

அதில் இருந்து இரண்டாம் பாகம் கதை தொடங்கும் என்று தெரிகிறது. இந்த படத்திலும் கமல்ஹாசன் வயதானவராகவும், இளைஞராகவும் 2 வேடங்களில் வருகிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. கமல்ஹாசனுக்கு எதிரான வழக்கு அக்டோபர் 15-ந்தேதிக்கு ஒத்திவைப்பு: டெல்லி கோர்ட்டு உத்தரவு
இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் பேசியதாக, கமல்ஹாசனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை வருகிற அக்டோபர் 15-ந்தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.
2. ‘‘அரசாங்கம் துரத்தும் படங்களை எடுத்து இருக்கிறோம்’’ பட விழாவில் கமல்ஹாசன் பேச்சு
ராஜேஷ் செல்வா இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள புதிய படம் ‘கடாரம் கொண்டான்’. கமல்ஹாசன் தயாரித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
3. ‘அரசியல் என்னுடைய தொழில் அல்ல’ கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி
தேர்தல் முடிவுகள் ஊக்கத்தை தந்திருப்பதாகவும், அரசியல் தன்னுடைய தொழில் அல்ல என்றும் கமல்ஹாசன் பரபரப்பாக பேசினார்.
4. தேர்தல் தோல்வியால் எங்களுக்கு ஏமாற்றம் இல்லை -கமல்ஹாசன்
தேர்தல் தோல்வியால் எங்களுக்கு ஏமாற்றம் எதுவும் இல்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
5. மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்ற கிளை
மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனுக்கு, மதுரை உயர்நீதிமன்ற கிளை நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது.