சினிமா செய்திகள்

திகில் கலந்த மர்ம படத்தில், அமலாபால் + "||" + In the horror mixed movie, Amala Paul

திகில் கலந்த மர்ம படத்தில், அமலாபால்

திகில் கலந்த மர்ம படத்தில், அமலாபால்
திகில் கலந்த மர்ம படத்தில் அமலாபால் தடயவியல் நிபுணராக நடிக்கிறார்.
அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வரும் கதாநாயகிகள் பட்டியலில், அமலாபால் இருந்து வருகிறார். `சிந்து சமவெளி' படத்தில் மாமனாருடன் உறவு வைத்துக் கொள்ளும் மருமகளாக நடித்து பரபரப்பை ஏற்படுத்திய அவர், தொடர்ந்து துணிச்சல் மிகுந்த வேடங்களில் நடித்து, பிரபல நாயகிகளில் ஒருவராக இருக்கிறார்.

கடந்த சில மாதங்களாக அவர் தனது கவர்ச்சி படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழி படங்களில் நடித்து வரும் அவர், அடுத்து ஒரு புதிய படத்தில் நடிக்க சம்மதித்து இருக்கிறார். இந்த படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை.

தமிழ், மலையாளம் ஆகிய 2 மொழிகளில் தயாராகும் அந்த படத்தில் அமலாபால் தடயவியல் நிபுணராக நடிக்கிறார். இது, திகில் கலந்த மர்ம படம். ஒரு மர்மமான வழக்கை தீர்க்க, அவர் கையாளும் தனித்துவமான வழிமுறைகளை சுற்றி கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த படம், ஒரு உணமையான வழக்கை அடிப்படையாக கொண்டது. 6 மாதங்கள் பல நிபுணர்களுடன் கலந்து பேசி, திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

ஏ.ஜே.பிலிம்ஸ், ஒயிட் ஸ்கிரீன் மீடியா இணைந்து தயாரிக்கின்றன. படப்பிடிப்பு வருகிற மார்ச் மாதம் தொடங்குகிறது. மொத்த படமும் சென்னை, கோவை ஆகிய நகரங்களில் படமாக்கப்பட உள்ளன.