சினிமா செய்திகள்

அதிக படங்களில் நயன்தாரா + "||" + Nayanthara in most films

அதிக படங்களில் நயன்தாரா

அதிக படங்களில் நயன்தாரா
தமிழ் பட உலகில் ‘நம்பர் ஒன்’ இடத்தை தொடர்ந்து தக்க வைத்து வருகிறார் நயன்தாரா.
தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் பெறும் நடிகைகள் பட்டியலிலும் முதல் இடத்தில் இருக்கிறார். ஒரு படத்துக்கு ரூ.4 கோடி முதல் ரூ.6 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். கதாநாயகர்களை முதன்மைபடுத்தும் படங்கள்தான் ஓடும் என்ற மாயையையும் உடைத்துள்ளார்.

நயன்தாராவை கதையின் நாயகியாக வைத்து அதிக படங்கள் வருகின்றன. அவை வசூலும் பார்க்கின்றன. 2005-ல் ஐயா படத்தில் ஆரம்பமான அவரது சினிமா மார்க்கெட் ஏறுமுகமாகவே உள்ளது. தெலுங்கு, மலையாள பட உலகிலும் ஆதிக்கம் செலுத்துகிறார். சிம்பு, பிரபுதேவாவுடன் ஏற்பட்ட காதல் சர்ச்சைகள் இவர் மார்க்கெட்டை அசைக்கவில்லை.

தனக்கென தனி ஸ்டைல், பாணியை உருவாக்கி உள்ளார். இந்தியில் வித்யாபாலன், கங்கனா ரணாவத், தீபிகா படுகோனே போன்ற நடிகைகள் கதாநாயகர்களுக்கு இணையாக பட உலகை கலக்கி வருகின்றனர். அதுபோல் தென்னிந்திய மொழி படங்களில் தனி ராஜ்ஜியம் நடத்துகிறார். கடந்த வருடம் அவர் நடிப்பில் கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள், தெலுங்கில் ஜெய்சிம்ஹா படங்கள் வந்தன.

இந்த வருடமும் அதிக படங்கள் கைவசம் வைத்துள்ளார். அஜித் ஜோடியாக நடித்த விஸ்வாசம் படம் திரைக்கு வந்துள்ளது. ஐரா, கொலையுதிர் காலம் படங்கள் அடுத்தடுத்து வருகின்றன. விஜய், சிவகார்த்திகேயன் ஆகியோர் ஜோடியாக நடிக்கவும் ஒப்பந்தம் செய்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. முதன் முதலாக 2 வேடங்களில் நயன்தாரா!
தமிழ் பட உலகின் ‘பிரபல’ கதாநாயகியான நயன்தாரா, முதன் முதலாக ஒரு படத்தில் 2 வேடங்களில் நடிக்கிறார். அந்த படத்தின் பெயர், ‘ஐரா.’
2. நேரம் தவறாத நயன்தாரா!
தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கி முன்னணியில் இருக்கும் கதாநாயகி, நயன்தாரா. தனது படங்கள் வரிசையாக வெற்றி பெறுவதால், புதிய படங்களை ஒப்புக்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்துகிறார். அதைவிட, படப்பிடிப்புக்கு சரியான நேரத்துக்கு வருவதில் கவனம் செலுத்தி வருகிறார். டைரக்டர் சொன்ன நேரத்துக்கு முன்பே படப்பிடிப்பு தளத்துக்கு வந்து விடுகிறார்.
3. நயன்தாரா சம்பளம் ரூ.6 கோடியாக உயர்ந்தது!
தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் முதன்மை நாயகியான நயன்தாரா, படத்துக்கு படம் தனது சம்பளத்தை உயர்த்திக் கொண்டே போகிறார்.
4. நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது? - ரசிகர்கள் எதிர்பார்ப்பு
நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஆகியோரது திருமணம் எப்போது, என ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
5. சிரஞ்சீவி படத்தில் ராணி வேடத்தில் நயன்தாரா
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார் நயன்தாரா. கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களிலும் நடிக்கிறார். இப்போது 7 படங்கள் அவர் கைவசம் உள்ளன.

ஆசிரியரின் தேர்வுகள்...