சினிமா செய்திகள்

முருகதாஸ் படத்திலும் இளமை தோற்றம் : ரஜினிகாந்த் ஜோடியாக கீர்த்தி சுரேஷ்? + "||" + Keerthi Suresh to pair with Rajinikanth

முருகதாஸ் படத்திலும் இளமை தோற்றம் : ரஜினிகாந்த் ஜோடியாக கீர்த்தி சுரேஷ்?

முருகதாஸ் படத்திலும் இளமை தோற்றம் : ரஜினிகாந்த் ஜோடியாக கீர்த்தி சுரேஷ்?
ரஜினிகாந்த் நடிப்பில் ‘2.0’ படத்துக்கு பிறகு ‘பேட்ட’ படம் திரைக்கு வந்துள்ளது. சமீபத்தில் ஓய்வுக்காக அமெரிக்கா சென்றுவிட்டு சென்னை திரும்பிய அவர் தற்போது புதிய படத்தில் நடிக்க தயாராகிறார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பை அடுத்த மாதம் (பிப்ரவரி) தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.

முந்தைய படங்களான ரமணாவில் லஞ்சத்தையும், ‘கத்தி’யில் விவசாயிகள் பிரச்சினைகளையும், ‘சர்கார்’ படத்தில் அரசியல்வாதிகள் முறைகேடுகளையும் முருகதாஸ் சொல்லி இருந்தார். அவரது மற்ற படங்களும் வெவ்வேறு கதை களங்களில் இருந்தன. தற்போது ரஜினி நடிக்க உள்ள படம் முழு அரசியல் கதையாக இருக்கும் என்று தகவல் கசிந்துள்ளது.

இந்த படத்துக்கு ‘நாற்காலி’ என்று தலைப்பு வைக்க ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. பேட்ட படத்தில் ரஜினியின் இளமை தோற்றம் ரசிகர்களை கவர்ந்தது. புதிய படத்திலும் அவரை இளமையாகவே காட்ட முருகதாஸ் திட்டமிட்டு உள்ளார்.

இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க கதாநாயகிகள் பரிசீலிக்கப்பட்டனர். தற்போது கீர்த்தி சுரேசை தேர்வு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான நடிகையர் திலகம் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பு பேசப்பட்டது. தொடர்ந்து முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து வரும் அவர் இப்போது ரஜினிக்கும் ஜோடியாகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. படப்பிடிப்புக்கு பணம் கொடுப்பதில் சிக்கல் : தேர்தலால் தாமதமாகும் ரஜினிகாந்த் படம்
ரஜினிகாந்த் சட்டமன்ற தேர்தலை குறிவைத்துள்ளதால் அவரது அரசியல் பிரவேசம் தள்ளிப்போகிறது. இதற்கிடையில் 2 புதிய படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார்.
2. 21 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியில்லை: ரஜினிகாந்த் பேட்டி
21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியில்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
3. கலைத்துறையில் மட்டுமே உள்ளார்; அரசியலுக்கு ரஜினிகாந்த் இன்னும் வரவில்லை கி.வீரமணி பேட்டி
ரஜினிகாந்த் அரசியலுக்கு இன்னும் வரவில்லை. கலைத்துறையில் மட்டுமே உள்ளார் என கி.வீரமணி கூறினார்.
4. சென்னையில் ரஜினிகாந்த் - திருமாவளவன் - திருநாவுக்கரசர் சந்திப்பு
சென்னையில் ரஜினிகாந்த் காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோரை சந்தித்தார்.
5. ‘ரஜினிகாந்த் நிலையான அரசியல் கட்சியை நடத்த முடியாது’ ஆர்.எம்.வீரப்பன் பேட்டி
ரஜினிகாந்த் நிலையான அரசியல் கட்சியை நடத்த முடியாது என்று ஆர்.எம்.வீரப்பன் கூறினார்.