சினிமா செய்திகள்

இளையராஜா இசையில்விஜய் ஆண்டனி பாடி, நடிக்கிறார் + "||" + Ilayaraja Music Vijay Antony singing, Acting

இளையராஜா இசையில்விஜய் ஆண்டனி பாடி, நடிக்கிறார்

இளையராஜா இசையில்விஜய் ஆண்டனி பாடி, நடிக்கிறார்
விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் ‘தமிழரசன்’ என்ற படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.
விஜய் ஆண்டனி, ‘சுக்ரன்’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். ‘வேட்டைக்காரன்,’ ‘வேலாயுதம்’ உள்பட 39 படங்களுக்கு அவர் இசையமைத்தார். ‘நான்’ என்ற படத்தில் அவர் கதாநாயகனாக உயர்ந்தார். தொடர்ந்து அவர் கதாநாயகனாக நடித்து வருகிறார். அவர் நடிக்கும் படங்களுக்கு இதுவரை அவரே இசையமைத்து வந்தார்.

முதல் முறையாக அவர் கதாநாயகனாக நடிக்கும் ‘தமிழரசன்’ என்ற படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். ‘தமிழரசன்,’ அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த திகில் படம் ஆகும். பாபு யோகேஸ்வரன் டைரக்டு செய்கிறார். கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். நகைச்சுவை கதாபாத்திரத்தில், யோகி பாபு நடிக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். கவுசல்யா ராணி தயாரிக்கிறார்.

படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது. அசாம், கொல்கத்தா ஆகிய இடங்களில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

இந்த படத்தில் விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். படத்தில் இவர், சொந்த குரலில் ஒரு பாடலை பாடுகிறார். இதுபற்றி அவர் கூறும்போது, “இளையராஜா இசையில் பாட வேண்டும் என்பது என் நீண்ட கால ஆசை. அது, இப்போது நிறைவேறி இருக்கிறது” என்றார். ஏற்கனவே பல படங்களில் பாடியிருக்கும் ரம்யா நம்பீசனும் சொந்த குரலில், ஒரு பாடலை பாடுகிறார்.

தமிழ் திரையுலகின் முதல் ‘சூப்பர் ஸ்டார்’ ஆன தியாகராஜ பாகவதர் காலத்தில்தான் கதாநாயகனும், கதாநாயகியும் சொந்த குரலில் பாடி நடிப்பார்கள். அதன் பிறகு நீண்ட பல வருட இடைவெளிக்குப்பின் கதாநாயகனும், கதாநாயகியும் பாடி நடிப்பது, குறிப்பிடத்தக்கது. இளையராஜா கூறும்போது, “இளைஞர்களுடன் இணைந்து பணி புரிவதில், மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.