சினிமா செய்திகள்

எனக்கு ரசிகர்கள் இல்லையா? - நடிகர் சிம்பு ஆவேசம் + "||" + Me are not fans - Actor Simbu Angry

எனக்கு ரசிகர்கள் இல்லையா? - நடிகர் சிம்பு ஆவேசம்

எனக்கு ரசிகர்கள் இல்லையா? - நடிகர் சிம்பு ஆவேசம்
எனக்கு ரசிகர்கள் இல்லையா என நடிகர் சிம்பு ஆவேசமாக கூறியுள்ளார்.

நடிகர் சிம்பு சில தினங்களுக்கு முன்பு தனது கட் அவுட்களுக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டாம். பேனர் வைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்டு இருந்தார். தற்போது தனது முடிவை மாற்றி மீண்டும் இன்னொரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது:-

“நான் ஏற்கனவே அதிக விலை கொடுத்து டிக்கெட் எடுத்து படம் பார்க்க வேண்டாம் என்றும் எனக்கு கட் அவுட் பேனர் வைத்து பால் அபிஷேகம் செய்ய வேண்டாம் என்றும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தேன். அதற்கு பதிலாக அம்மாவுக்கு ஒரு புடவை, அப்பாவுக்கு ஒரு வேட்டி எடுத்து கொடுத்தீர்கள் என்றால் சந்தோஷப்படுவேன் என்றும் சொல்லி இருந்தேன்.

அதை பார்த்து இவரெல்லாம் எதற்கு இதை பேசுகிறார். வெறும் விளம்பரத்துக்காகத்தான் பேசுகிறார். அவருக்கு இருப்பதே வெறும் இரண்டு மூன்று ரசிகர்கள்தான் என்று சொல்கிறார்கள். ஒரு தவறு செய்தால் அதை திருத்திக்கொள்ள வேண்டும் அல்லவா? எனக்கு வெறும் இரண்டு மூன்று ரசிகர்கள்தான் இருப்பதால் அந்த இரண்டு மூன்று பேருக்கும் ஒரு அன்பு கட்டளை வைக்கிறேன்.

இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு எனக்கு நீங்கள் கட் அவுட், பேனர் வைக்க வேண்டும். பால் எல்லாம் பாக்கெட்டில் இல்லாமல் அண்டாவில் கொண்டு வந்து ஊற்ற வேண்டும். எனக்குத்தான் யாருமே இல்லையே, இருப்பது வெறும் இரண்டு மூன்று ரசிகர்கள்தானே. அதனால் யாரும் கேள்வி கேட்கவும் முடியாது. வந்தா ராஜாவாதான் வருவேன் படத்துக்கு வேறு லெவலில் செய்யுங்கள்.” இவ்வாறு சிம்பு கூறியுள்ளார்.