சினிமா செய்திகள்

இயக்குநர் ஹரி-நடிகர் சூர்யாவை 6-வது முறையாக இணைக்கும் யானை + "||" + Director Hari, actor Surya Joining 6th movie Yaanai

இயக்குநர் ஹரி-நடிகர் சூர்யாவை 6-வது முறையாக இணைக்கும் யானை

இயக்குநர் ஹரி-நடிகர் சூர்யாவை 6-வது முறையாக இணைக்கும் யானை
இயக்குநர் ஹரி, நடிகர் சூர்யா 6-வது முறையாக இணையும் படத்திற்கு யானை என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் "தானா சேர்ந்த கூட்டம்".  இப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது சூர்யா, செல்வராகவன் இயக்கத்தில் "என்.ஜி.கே" படத்திலும், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் "காப்பான்" படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கே.வி ஆனந்தின் "காப்பான்" திரைப்படம் முடிவடைந்ததும், ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியது. அதன்படி தற்போது "யானை" என்ற படத்தின் மூலம் இயக்குநர் ஹரியுடன் நடிகர் சூர்யா மீண்டும் இணைய உள்ளார். இப்படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரிக்கிறது.

நடிகர் சூர்யாவுடன் மூன்றாவது முறையாக ஏவிஎம் நிறுவனம் இணைகிறது. மேலும் ஆறு, வேல் மற்றும் சிங்கம், சிங்கம்-2, சிங்கம் -3  ஆகிய படங்களை தொடர்ந்து சூர்யாவும், ஹரியும் 6-வது முறையாக கூட்டணி சேருகின்றனர். இதனால் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.