சினிமா செய்திகள்

காக்க காக்க, கண்டநாள் முதல்: சூர்யா, பிரசன்னாவின் 2-ம் பாகம் படங்கள்? + "||" + Kakka kakka, Kanda nal mudhal: Suriya, Prasanna Part 2 pictures?

காக்க காக்க, கண்டநாள் முதல்: சூர்யா, பிரசன்னாவின் 2-ம் பாகம் படங்கள்?

காக்க காக்க, கண்டநாள் முதல்: சூர்யா, பிரசன்னாவின் 2-ம் பாகம் படங்கள்?
சூர்யாவின் காக்க காக்க , பிரசன்னாவின் கண்டநாள் முதல் ஆகிய படங்களின் 2-ம் பாகம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழில் இரண்டாம் பாகம் படங்கள் வெளியாகி வசூல் குவிக்கின்றன. ரஜினிகாந்தின் எந்திரன், கமல்ஹாசனின் விஸ்வரூபம் இரண்டு பாகங்கள் வந்தன. சூர்யாவின் சிங்கம், 3 பாகங்கள் வந்தது. சண்டக்கோழி, சாமி, திருட்டுப் பயலே, வேலையில்லா பட்டதாரி படங்களின் 2-ம் பாகங்களும் வெளியானது. அந்த வரிசையில் சூர்யாவின் காக்க காக்க, பிரசன்னாவின் கண்டநாள் முதல் ஆகிய படங்களும் வருகின்றன.

காக்க காக்க, சூர்யாவின் திரையுலக வாழ்க்கையில் முக்கிய படம். போலீஸ் அதிகாரியாக நடித்து இருந்தார். ஜோடியாக ஜோதிகா வந்தார். கவுதம் மேனன் இயக்கினார். 2003-ல் இந்த படம் வெளியானது. சூர்யா நடிக்க இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சூர்யா கைவசம் என்.ஜி.கே, காப்பான் ஆகிய 2 படங்கள் உள்ளன. இவை திரைக்கு வந்ததும் காக்க காக்க-2 பட வேலைகள் தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரசன்னா, லைலா ஜோடியாக நடித்து கண்டநாள் முதல் படம் 2005-ல் வெளியாகி வரவேற்பை பெற்றது. வி.பிரியா இயக்கி இருந்தார். இந்த படத்தில் நடித்த பிரசன்னா, லைலா மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சமீபத்தில் சந்தித்து பேசினர். அந்த புகைப்படத்தை பிரசன்னா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு கண்டநாள் முதல் படத்தின் 2-ம் பாகம் எடுப்பது குறித்து ஆலோசித்ததாக தெரிவித்து உள்ளார்.