சினிமா செய்திகள்

‘‘என் இதயம் நொறுங்கிவிட்டது’’ – சவுந்தர்யா + "||" + My heart is broken - Soundarya

‘‘என் இதயம் நொறுங்கிவிட்டது’’ – சவுந்தர்யா

‘‘என் இதயம் நொறுங்கிவிட்டது’’ – சவுந்தர்யா
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்கள் இறுதிப்பயணம் புகைப்படத்தை சவுந்தர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு எனது இதயமே நொறுங்கிவிட்டது என்று குறிப்பிட்டு உள்ளார்.
ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கும், தொழில் அதிபர் விசாகனுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் அனிமே‌ஷன் படத்தையும், தனுஷ் நடித்த வேலை இல்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தையும் சவுந்தர்யா இயக்கி உள்ளார். தற்போது கணவர் விசாகனுடன் தேனிலவுக்காக ஐஸ்லாந்து சென்றுள்ளார். 

அங்குள்ள பனிப்பிரதேசங்களை கணவருடன் சுற்றிப்பார்த்து இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட படங்களை டுவிட்டர் பக்கத்தில் சவுந்தர்யா வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் பரவி வருகிறது. தனக்கு அன்பான கணவர் கிடைத்து இருப்பதாகவும், இதற்காக கடவுளுக்கு நன்றி என்றும் வலைத்தளத்தில் சவுந்தர்யா பதிவிட்டு இருந்தார். 

இந்த நிலையில் காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் துணை ராணுவத்தினர் மரணம் அடைந்தது இந்தியாவையே உலுக்கி உள்ளது. இதற்கு நடிகர்–நடிகைகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். நிதி உதவியும் அளித்து வருகிறார்கள். இந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்கள் இறுதிப்பயணம் புகைப்படத்தை சவுந்தர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு எனது இதயமே நொறுங்கிவிட்டது என்று குறிப்பிட்டு உள்ளார்.