சினிமா செய்திகள்

வைரலாகும் புகைப்படம்பிரியங்கா சோப்ரா கர்ப்பம்? + "||" + Priyanka Chopra pregnancy

வைரலாகும் புகைப்படம்பிரியங்கா சோப்ரா கர்ப்பம்?

வைரலாகும் புகைப்படம்பிரியங்கா சோப்ரா கர்ப்பம்?
பிரியங்கா சோப்ரா கர்ப்பமாக இருப்பதாக வலைத்தளங்களில் தகவல் பரவியது.
தமிழில் ‘தமிழன்’ படத்தில் கதாநாயகியாக நடித்து இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் பிரியங்கா சோப்ரா. குவாண்டிகா தொடர் மூலம் ஹாலிவுட் படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிட்டியது. பிரியங்கா சோப்ராவுக்கும் அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற பாப் பாடகரும், நடிகருமான நிக்ஜோனாசுக்கும் காதல் மலர்ந்து கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டனர்.

தற்போது கணவருடன் அமெரிக்காவில் வசிக்கிறார். மும்பைக்கும் அடிக்கடி வந்து செல்கிறார். இந்த நிலையில் பிரியங்கா சோப்ரா கர்ப்பமாக இருப்பதாக வலைத்தளங்களில் தகவல் பரவியது. அதைப் பார்த்து ரசிகர்கள் முகநூல் மற்றும் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருந்தனர்.

வயிறு பெரிதாக இருப்பதுபோன்ற பிரியங்கா சோப்ராவின் புகைப்படம் ஒன்றும் அவர் கர்ப்பமாக இருப்பதாக உறுதிப்படுத்தி வலைத்தளங்களில் பரவியது. இதற்கு அவரது தாய் மது சோப்ரா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “பிரியங்கா சோப்ராவின் வயிறு பெரிதாக இருப்பதை வைத்து அவர் கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவி உள்ளது. கேமராவை தவறான கோணத்தில் வைத்து படம் பிடித்ததால் அந்த தோற்றம் வந்துள்ளது. அவர் கர்ப்பமாக இல்லை” என்றார்.