சினிமா செய்திகள்

ஜெயலலிதா வாழ்க்கை படத்தின் பெயர் ‘தலைவி’டைரக்டர் விஜய் தகவல் + "||" + Jayalalithaa's life title name

ஜெயலலிதா வாழ்க்கை படத்தின் பெயர் ‘தலைவி’டைரக்டர் விஜய் தகவல்

ஜெயலலிதா வாழ்க்கை படத்தின் பெயர் ‘தலைவி’டைரக்டர் விஜய் தகவல்
ஜெயலலிதா வாழ்க்கை படத்தின் பெயர் ‘தலைவி’ என்று டைரக்டர் விஜய் தெரிவித்துள்ளார்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை கதையை சினிமா படமாக்க போட்டா போட்டி ஏற்பட்டு உள்ளது. இயக்குனர் பிரியதரிஷினி ‘த அயன் லேடி’ என்ற பெயரில் இதன் பட வேலைகளை தொடங்கி உள்ளார். இந்த படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நித்யாமேனன் நடிக்கிறார். அவரது முதல் தோற்றமும் வெளியாகி உள்ளது.

இயக்குனர்கள் பாரதிராஜா, விஜய் ஆகியோரும் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஜெயலலிதா வாழ்க்கை கதையை படமாக்குவது குறித்து டைரக்டர் விஜய் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதுகுறித்து தினத்தந்தி நிருபரிடம் அவர் கூறியதாவது:-

“ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்குகிறேன். இந்த படத்துக்கு ‘தலைவி’ என்று தலைப்பு வைத்துள்ளோம். வருகிற ஏப்ரல் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளோம். இந்த படத்தில் ஜெயலலிதா வேடத்திலும் மற்ற கதாபாத்திரங்களிலும் நடிக்கும் நடிகர் நடிகை தேர்வு நடக்கிறது.

இன்னும் 10 நாட்களில் நடிகர், நடிகைகள் முடிவு செய்யப்பட்டு விடும். ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்குவதற்கு அவரது அண்ணன் மகன் தீபக்கிடம் பேசி அனுமதி பெற்று விட்டோம்.”

இவ்வாறு அவர் கூறினார்.

ஜெயலலிதா வேடத்தில் நடிக்க திரிஷா, மஞ்சிமா மோகன் ஆகியோர் விருப்பம் தெரிவித்து உள்ளனர். ஐஸ்வர்யாராய், வித்யா பாலன், ஜோதிகா, நயன்தாரா, அனுஷ்கா ஆகியோரும் பரிசீலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. எம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்க மோகன்லால் உள்ளிட்ட சிலரிடம் பேசி வருகிறார்கள்.