சினிமா செய்திகள்

டுவிட்டரில் திரிஷா சாதனை : பின்தொடரும் 50 லட்சம் பேர் + "||" + Trisha achievement in tweet: 50 lakh followers

டுவிட்டரில் திரிஷா சாதனை : பின்தொடரும் 50 லட்சம் பேர்

டுவிட்டரில் திரிஷா சாதனை : பின்தொடரும் 50 லட்சம் பேர்
நடிகர்-நடிகைகள் வாழ்க்கையில் டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் முக்கிய அங்கமாகி விட்டன.
சமூக, அரசியல் கருத்துகளை அவற்றில் வெளியிடுகிறார்கள். நடித்துக் கொண்டிருக்கும் படங்கள் பற்றிய தகவல்களையும், புகைப்படங்களையும் இதில் பகிர்ந்து ரசிகர்களுடன் நேரடி தொடர்பிலும் இருக்கிறார்கள்.

இதனால் சிலர் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் எதிர்கொள்கின்றனர். சில நடிகைகளின் வலைத்தளங்களை விஷமிகள் ஊடுருவி முடக்கும் நிகழ்வுகளும் நடக்கின்றன. நடிகர்-நடிகைகளின் வலைத்தளங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் பின் தொடர்கிறார்கள்.

அந்த வகையில் நடிகை திரிஷாவின் டுவிட்டர் பக்கத்தை பின்தொடர்வோர் எண்ணிக்கை 50 லட்சமாக உயர்ந்து சாதனை நிகழ்த்தி உள்ளது. இதற்காக அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். திரிஷாவும் மகிழ்ச்சியில் இருக்கிறார். திரிஷா 2002-ல் திரையுலகில் அறிமுகமாகி தற்போது முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.

கடந்த வருடம் அவர் நடிப்பில் வெளிவந்த ‘96’ படம் பெரிய வெற்றி பெற்றது. ரஜினிகாந்துடன் நடித்த பேட்ட படம் இந்த வருடம் திரைக்கு வந்தது. தற்போது கர்ஜனை, சதுரங்க வேட்டை-2, பரமபத விளையாட்டு மற்றும் 1818 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.