சினிமா செய்திகள்

அஜித்குமார்-வெங்கட் பிரபு சந்திப்பு : மங்காத்தா 2-ம் பாகம் தயாராகிறது? + "||" + Ajith Kumar-Venkat Prabhu meeting: Mankatha Part 2 is preparing

அஜித்குமார்-வெங்கட் பிரபு சந்திப்பு : மங்காத்தா 2-ம் பாகம் தயாராகிறது?

அஜித்குமார்-வெங்கட் பிரபு சந்திப்பு : மங்காத்தா 2-ம் பாகம் தயாராகிறது?
தமிழில் இரண்டாம் பாகம் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. எந்திரன், விஸ்வரூபம், சிங்கம், சண்டக்கோழி, சாமி, திருட்டுப்பயலே, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட பல படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன.
சூர்யாவின் காக்க காக்க படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சிகள் நடக்கின்றன.

இதுபோல் அஜித்குமார், அர்ஜுன், திரிஷா நடித்து 2011-ல் வெளியாகி வசூல் குவித்த மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்க வேண்டும் என்று அந்த படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவை ரசிகர்கள் வற்புறுத்தி வந்தனர். 

இதுகுறித்து வெங்கட் பிரபு கூறும்போது, “மங்காத்தா-2 படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. மீண்டும் அஜித் படத்தை இயக்குவேன். அது மங்காத்தா 2-ம் பாகமா அல்லது வேறு கதையா என்பதை விரைவில் அறிவிப்பேன்” என்றார்.

இந்த நிலையில் அஜித்குமாரை வெங்கட்பிரபு திடீரென்று சந்தித்து பேசினார். அவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். மங்காத்தா இரண்டாம் பாகத்தை எடுப்பது குறித்து இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. 

விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்குமார் தற்போது இந்தி ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார். போனிகபூர் தயாரிப்பில் இன்னொரு படத்திலும் நடிக்க உள்ளார். அந்த படங்களை முடித்துவிட்டு வெங்கட்பிரபு படத்துக்கு வருவார் என்று தெரிகிறது.