சினிமா செய்திகள்

கோவிலுக்குள் புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ் + "||" + Nivedita Pethuraj who stuck in controversy in Take a photograph inside the temple

கோவிலுக்குள் புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்

கோவிலுக்குள் புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்
‘ஒரு நாள் கூத்து’ படத்தில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
பார்ட்டி, ஜகஜால கில்லாடி, பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன. மேலும் புதிதாக தமிழ் படமொன்றிலும் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.

நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். பின்னர் கோவிலுக்குள் கையில் பிரசாதத்துடனும், கோவில் தெப்பக்குளம் அருகில் உட்கார்ந்தும் சில புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

இந்த புகைப்படங்கள் சர்ச்சையை உருவாக்கி உள்ளன. மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடுமையான சோதனைக்கு பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிப்படுகிறார்கள். இதையும் மீறி நிவேதா பெத்துராஜ் கோவிலுக்குள் செல்போனை கொண்டு சென்று புகைப்படம் எடுத்ததை சமூக வலைத்தளத்தில் பலரும் கண்டித்து வருகிறார்கள். நிவேதா பெத்துராஜ் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதித்ததையும் விமர்சித்து வருகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. கதாநாயகிகளாக கொஞ்ச காலம்தான் நீடிக்க முடியும் - நடிகை நிவேதா பெத்துராஜ்
தமிழில் ஒரு நாள் கூத்து படத்தில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ், உதயநிதியுடன் பொதுவாக என்மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன் படங்களில் நடித்தார். தற்போது அவர் கைவசம் 9 படங்கள் உள்ளன.
2. அமெரிக்கா சென்று “ஹாலிவுட் படத்தில் நடிக்க போகிறேன்”
‘ஒருநாள் கூத்து’ படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர், நிவேதா பெத்துராஜ்.