சினிமா செய்திகள்

சுயசரிதை எழுதும் இளையராஜா + "||" + Writing Biography Ilayaraja

சுயசரிதை எழுதும் இளையராஜா

சுயசரிதை எழுதும் இளையராஜா
‘அன்னக்கிளி’ படத்துக்கு 1976-ல் இசையமைத்து முதல் படத்திலேயே மச்சானை பாத்தீங்களா, அன்னக்கிளி உன்னை தேடுது உள்ளிட்ட பாடல்கள் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான இளையராஜா இதுவரை 1000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து சாதனை நிகழ்த்தி இருக்கிறார்.
அவரது 75-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் பல்வேறு கல்லூரிகளில் கொண்டாடப்பட்டு அதில் இளையராஜாவும் பங்கேற்று பேசி வருகிறார். சென்னை ஐ.ஐ.டி.யில் நடந்த விழாவில் இளையராஜா கலந்து கொண்டு ‘ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ’ பாடலோடு நிகழ்ச்சியை தொடங்கினார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய படங்களுக்கு ஒரே நேரத்தில் இசையமைத்த பாடல்களை பாடினார். அதை கேட்டு மாணவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். பின்னர் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து இளையராஜா பேசியதாவது:-


“வளிமண்டலத்தில் நீர் காற்றுபோல இசையும் இருக்கிறது. அந்த அதிர்வலைகளை எனது மூளையால் தொட முடிந்தது. இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அனைத்து கல்வி நிலையங்களிலும் இசையையும் ஒரு பாடமாக சேர்க்க வேண்டும். இசைகலைஞர்களால் உருவாக்கப்படும் இசைக்குதான் ஆற்றம் அதிகம் இருக்கிறது.

கணினி உருவாக்கும் இசையில் உணர்ச்சி என்பது இருக்காது. 1978-ம் ஆண்டில் 56 வாரங்களில் 58 படங்களுக்கு நான் இசையமைத்தேன். என்னை பற்றி சுயசரிதை எழுத இருக்கிறேன். விரைவில் அது வெளிவரும்.” இவ்வாறு இளையராஜா கூறினார்.