சினிமா செய்திகள்

கை, கால் நன்றாகத்தானே உள்ளது: நடிகை விஜயலட்சுமியை சாடிய சிவராஜ்குமார் + "||" + Hand, foot is fine: Actress Vijayalakshmi on Sivarajkumar angry

கை, கால் நன்றாகத்தானே உள்ளது: நடிகை விஜயலட்சுமியை சாடிய சிவராஜ்குமார்

கை, கால் நன்றாகத்தானே உள்ளது: நடிகை விஜயலட்சுமியை சாடிய சிவராஜ்குமார்
கை, கால் நன்றாகத்தானே உள்ளது என நடிகை விஜயலட்சுமி குறித்து நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழில் பூந்தோட்டம் படத்தில் தேவயானி தங்கையாக நடித்தவர் விஜயலட்சுமி. ‘பிரண்ட்ஸ்’ படத்தில் விஜய் தங்கையாகவும், சூர்யா ஜோடியாகவும் நடித்து இருந்தார். ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் ஆர்யாவுக்கு அண்ணியாக வந்தார். சமீபத்தில் திரைக்கு வந்த மீசையை முறுக்கு படத்திலும் நடித்து இருந்தார். கன்னடத்தில் அதிக படங்களில் நடித்துள்ளார்.

பெங்களூருவில் வசித்து வரும் விஜயலட்சுமி சமீபத்தில் உயர் ரத்த அழுத்தம் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை செலவுக்கு பணம் இல்லை என்றும் கன்னட சினிமா துறையினர் உதவி செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து இருந்தார். இதை ஏற்று சிலர் பணம் கொடுத்தனர்.

இந்த நிலையில் முன்னணி கன்னட நடிகர்கள் சிவராஜ்குமார், புனித்ராஜ்குமார் ஆகியோர் சிகிச்சைக்கு உதவவில்லை என்று பேசி விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டு இருந்தார். இதுகுறித்து மைசூருக்கு வந்த சிவராஜ்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்து அவர் கூறும்போது, “விஜயலட்சுமிக்கு எப்போதும் உதவி செய்துகொண்டு இருக்க முடியாது. அவர் சொல்வது உண்மையா என்று பார்க்க வேண்டும். உடலில் குறை உள்ளவர்களே கடினமாக உழைத்து வாழ்கிறார்கள். நல்ல கை, கால்கள், மன நலம் உள்ளவர்களால் ஏன் தன்னை பார்த்துக்கொள்ள முடியவில்லை. இயலாத ஒருவரை பார்த்தால் உதவி செய்ய தோன்றும். உதவும் உணர்வு உள்ளிருந்து வர வேண்டும்” என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. கை, கால் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தவர் வழக்கில் திடீர் திருப்பம்: விடுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்தது அம்பலம்
பல்லாவரம் அருகே கை, கால் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தவர், விடுதியில் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்ததும், போலீசுக்கு பயந்து அவரது உடலை விடுதி ஊழியர்கள்தான் கை, கால்களை கட்டி முட்புதரில் வீசியதும் தெரிந்தது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. அரக்கோணம் அருகே, கை, கால்களை கட்டி வாலிபர் கொலை - ஏரியில் பிணத்தை புதைத்து விட்டு ஓடியவர்களுக்கு வலைவீச்சு
அரக்கோணம் அருகே கை, கால்களை கட்டி வாலிபர் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை ஏரியில் புதைத்து விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.