ரஜினிகாந்த் பட வேலைகள் தொடங்கின
ரஜினிகாந்த் ‘பேட்ட’ படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். பட வேலைகள் தொடங்கி உள்ளன.
சென்னையில் உள்ள ஸ்டூடியோவில் படத்தில் வரும் ரஜினியின் தோற்றத்தை புகைப்படம் எடுக்கும் பணி நடந்தது. இந்த புகைப்படங்கள் வெளியானால் ரஜினியின் கதாபாத்திரம் தெரிய வரும்.
இதில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசியல், தாதாக்கள், அதிரடி என்று விறுவிறுப்பாக திரைக்கதையை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு வருகிற 10–ந்தேதி மும்பையில் தொடங்க உள்ளது. ஒரு மாதம் தொடர்ச்சியாக அங்கு படப்பிடிப்பை நடத்துகின்றனர்.
இடையில் வருகிற 18–ந்தேதி மட்டும் சென்னை வந்து ஓட்டு போட்டு விட்டு மீண்டும் மும்பை சென்று படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார். ரஜினியின் கதாபாத்திரம் சமூக வலைத்தளங்களில் வெளியாவதை தடுக்க படப்பிடிப்பில் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஏற்கனவே சந்திரமுகி படத்தில் இருவரும் ஜோடியாக நடித்து இருந்தனர். சிவாஜி படத்தில் ஒரு பாடலுக்கு சேர்ந்து நடனமும் ஆடி இருந்தனர். தற்போது அட்லீ இயக்கும் படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வரும் நயன்தாரா விரைவில் ரஜினிகாந்த் படத்தில் நடிக்க செல்கிறார்.
Related Tags :
Next Story