மம்முட்டியோடு நடித்த தயாரிப்பாளர்


மம்முட்டியோடு நடித்த தயாரிப்பாளர்
x
தினத்தந்தி 6 April 2019 7:30 AM IST (Updated: 5 April 2019 4:01 PM IST)
t-max-icont-min-icon

மம்முட்டி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மதுர ராஜா’ படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

மம்முட்டி- பிருத்விராஜ் நடிப்பில் 2010-ம் ஆண்டு வெளியான படம் ‘போக்கிரி ராஜா.’ மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாகத்தான் ‘மதுர ராஜா’ உருவாகியுள்ளது. ‘போக்கிரி ராஜா’ படத்தை இயக்கிய வைசாக் தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். 

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும், மலையாள திரையுலகில் அதிக வசூலையும் படைத்த ‘புலிமுருகன்’ திரைப்படத்தை இயக்கியவர்தான் இந்த வைசாக். இவையெல்லாம் தான் ‘மதுர ராஜா’ படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே எகிற வைத்திருக்கிறது.

இந்தப் படத்தை நெல்சன் என்பவர் அதிக பொருட்செலவில் தயாரித்து வருகிறார். பொதுவாக மம்முட்டி படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள், ஷூட்டிங் நடக்கும் இடத்திலேயே பெரும்பாலும் வருவது கிடையாது. ஆனால் நெல்சனுக்கு, மம்முட்டியோடு நடிக்க வேண்டும் என்று ஆசை. அதை படத்தை தயாரிப்பதாக முடிவு செய்தபோதே, இயக்குனர் வைசாக்கிடம் சொல்லியிருக்கிறார். இதையடுத்து இந்தப் படத்தில் முக்கியமான ஒரு அரசு அதிகாரி வேடத்தில் நெல்சனை நடிக்க வைத்திருக்கிறாராம், இயக்குனர்.

Next Story