சினிமா செய்திகள்

புதிய படங்களில் ஒப்பந்தம் செய்ய மறுப்பு : சினிமாவை விட்டு பிரியா வாரியர் விலகலா? + "||" + Refusal to sign new films: Priya Warrior to leave Cinema

புதிய படங்களில் ஒப்பந்தம் செய்ய மறுப்பு : சினிமாவை விட்டு பிரியா வாரியர் விலகலா?

புதிய படங்களில் ஒப்பந்தம் செய்ய மறுப்பு : சினிமாவை விட்டு பிரியா வாரியர் விலகலா?
‘ஒரு அடார் லவ்’ படத்தின் பாடல் காட்சியில் கண் சிமிட்டி இந்தியா முழுவதும் பிரபலமான பிரியா வாரியருக்கு அந்த படம் கைகொடுக்கவில்லை.
தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. படம் தோல்விக்கு அவரே காரணம் என்றும் குற்றம் சாட்டினர்.

கண் சிமிட்டல் பிரபலமானதால் பிரியா வாரியருக்கு முக்கியத்துவம் அளிக்கும்படி தயாரிப்பாளர் வற்புறுத்தி கதையை மாற்ற வைத்தார் என்று படத்தின் இயக்குனர் உமர் லூலூ குறை கூறினார். இதற்கு இன்ஸ்டாகிராமில் பதில் அளித்த பிரியா வாரியர், “நான் உண்மையை பேச ஆரம்பித்தால் சிலர் பிரச்சினையில் சிக்குவார்கள். அவர்களை போல் நானும் இருக்க கூடாது என்று அமைதி காத்து வருகிறேன். அவர்களை கர்மா கவனித்துக் கொள்ளும்” என்றார்.

இந்த நிலையில் பிரியா வாரியரை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்ய இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தயங்குகிறார்கள். அவர் கைவசம் ‘ஸ்ரீதேவி பங்களா’ என்ற ஒரு படம் மட்டுமே உள்ளது. அந்த படமும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியை அவதூறு செய்வதுபோல் உள்ளது என்று அவரது கணவர் போனிகபூர் எதிர்த்து வருகிறார். தலைப்பை மாற்றும்படி வக்கீல் நோட்டீசும் அனுப்பி உள்ளார்.

இதனால் வருத்தத்தில் இருக்கும் பிரியா வாரியர் சினிமாவை விட்டு விலகலாமா? என்று யோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஸ்ரீதேவி வாழ்க்கை கதையா? பிரியா வாரியர் படத்தை எதிர்த்து வழக்கு
இந்தியில் ‘ஸ்ரீதேவி பங்களா’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் கண்சிமிட்டல் பிரபலமான பிரியா வாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
2. பிரியா வாரியரை முந்திய நூரின்
ஒரு அடார் லவ் பட நாயகி பிரியா வாரியரை அவருடன் நடித்த நடிகை நூரின் முந்தினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...