ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது
சென்னை,
பேட்ட' படத்துக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியானது ஆனால், படக்குழு இதை உறுதிப்படுத்தவில்லை.
இந்த நிலையில், படத்தின் ஹீரோயினாக நயன்தாராவிடம் பேசப்பட்டுள்ளதாக ரஜினியின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் ட்விட்டரில் அறிவித்திருந்தார். மேலும், 'பேட்ட' படத்தைத் தொடர்ந்து இதற்கும் அனிருத் இசையமைக்க சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.
Here We Go! #Thalaivar167#Darbar@rajinikanth@ARMurugadoss#Nayanthara@anirudhofficial@santoshsivan@sreekar_prasadpic.twitter.com/cjmy4gQJjy
— Lyca Productions (@LycaProductions) April 9, 2019
இதற்கிடையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியிடப்பட்டது. படத்தின் பெயர் தர்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் டுவிட்டரில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த படத்தில், சமூக சேவகர், போலீஸ் என இருவேடங்களில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 2020 ஆம் ஆண்டு பொங்கலுக்கு படம் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story