விஜய் படத்தில் மற்றுமொரு கதாநாயகி
‘சர்கார்’ படத்துக்கு பிறகு அட்லி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இது அவருக்கு 63-வது படம் ஆகும். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.
விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், யோகிபாபு, ஆனந்த்ராஜ் ஆகியோரும் நடித்து உள்ளனர். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது.
இதில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். பெண்களுக்கு கால்பந்து பயிற்சி அளித்து சர்வதேச போட்டிகளில் ஜெயிக்க வைப்பதுபோல் திரைக்கதை அமைத்து இருப்பதாக கூறப்படுகிறது. சென்னையில் 3 மாதமாக பல்வேறு பகுதிகளில் இதன் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.
தினமும் விஜய்யை காண படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் ஏராளமான ரசிகர்கள் கூடுகிறார்கள். மீனம்பாக்கத்தில் உள்ள பின்னி மில் மற்றும் காட்டாங்கொளத்தூரில் உள்ள பல்கலைக்கழகத்தில் படப்பிடிப்புகள் நடந்தன. தற்போது சென்னைக்கு வெளியே உள்ள இடம் ஒன்றில் அதிக பொருட்செலவில் கால்பந்து விளையாட்டு மைதான அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த மைதானத்தில் விஜய் கால்பந்து விளையாடும் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. தற்போது இந்த படத்துக்கு இன்னொரு கதாநாயகியாக இந்துஜாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் மேயாத மான், மெர்குரி உள்பட சில படங்களில் நடித்து இருக்கிறார். தீபாவளிக்கு படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story