பழுவேட்டரையராக நடிக்க சத்யராஜ் தேர்வு : பொன்னியின் செல்வன் படத்தின் கதை-கதாபாத்திரங்கள்


பழுவேட்டரையராக நடிக்க சத்யராஜ் தேர்வு : பொன்னியின் செல்வன் படத்தின் கதை-கதாபாத்திரங்கள்
x
தினத்தந்தி 13 April 2019 5:30 AM IST (Updated: 13 April 2019 1:12 AM IST)
t-max-icont-min-icon

கல்லணை கட்டிய கரிகால சோழன் காலத்துக்கு முந்தைய சோழர்கள் வம்சம் நலிந்து பாண்டிய மன்னர்கள் பலம் பெற்று இருந்தனர். பின்னர் அவர்களும் நலிந்த நிலையில் பிற்கால சோழ வம்சம் தலைதூக்கியது.

பிற்கால சோழ வம்சத்தின் பேரரசர்களாக ராஜராஜ சோழனும் அவரது மகன் ராஜேந்திர சோழனும் போற்றப்படுகின்றனர்.

இந்த பிற்காலச் சோழ சாம்ராஜ்யம் உருவாகி வளர்ந்த நிலையில் இருந்து ராஜராஜ சோழன் முடி சூடுவது வரையிலான கால கட்டத்தில் சோழ சாம்ராஜ்யத்தில் நடந்த நிகழ்வுகளின் வரலாற்று ஆதாரங்களோடு கற்பனையையும் சேர்த்து கல்கி எழுதிய நாவல் பொன்னியின் செல்வன்.

60-க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களை கொண்ட இந்த நாவலில் ராஜராஜ சோழனின் தந்தையார் சுந்தர சோழன், அண்ணன் ஆதித்த கரிகாலன், அக்கா குந்தவை, குந்தவையின் காதல் கணவன் வந்தியத் தேவன், ராஜராஜ சோழனின் மனைவி வானதி, சோழ அரசுக்குள் அடங்கிய குறுநில மன்னர்களில் ஒருவரான பழுவேட்டரையர், வீரபாண்டியன், ராஜராஜ சோழனின் அன்புக்கு பாத்திரமான வீரம் மிக்க ஈழத்து அழகி பூங்குழலி, தந்திரம் மிக்க ஆழ்வார்கடியான், வீரபாண்டியனுக்காக சோழ சாம்ராஜ்யத்தை ஆட்டுவித்த நந்தினி உள்பட 10 கதாபாத்திரங்கள் முக்கியமானவை.

பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் இரண்டு பாகங்களாக படமாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். வந்தியத்தேவனாக கார்த்தி, பூங்குழலியாக நயன்தாரா, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். தற்போது பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ் தேர்வாகி உள்ளார்.

ஆழ்வார்க்கடியான் கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு ஆசை என்று பாரதிராஜா பல வருடங்களுக்கு முன்பே சொல்லி இருக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.


Next Story