பெண்ணை மையப்படுத்தும் கதையில் ஷோபனா


பெண்ணை மையப்படுத்தும் கதையில் ஷோபனா
x
தினத்தந்தி 13 April 2019 11:44 AM IST (Updated: 13 April 2019 11:44 AM IST)
t-max-icont-min-icon

முக்கிய கதாநாயகர்களையும் வைத்து சுமார் 60 படங்களை இயக்கியிருக்கிறார்.

மலையாளத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இயக்குனராக வலம் வருபவர் சத்யன் அந்திக்காடு. இவர் கடந்த 37 ஆண்டுகளில் மலையாள மொழியில் உள்ள அத்தனை முக்கிய கதாநாயகர்களையும் வைத்து சுமார் 60 படங்களை இயக்கியிருக்கிறார்.

தற்போது அவரது மகன் அனூப் சத்யன் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். ஏற்கனவே சில குறும்படங்களை இயக்கியிருக்கும் அனூப் சத்யன், பெண்ணை மையமாக வைத்து ஒரு முழு நீள படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் சுரேஷ்கோபி, ஷோபனா, நஸ்ரியா உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள்.

2005-ம் ஆண்டு வெளியான ‘மகளுக்கு’ என்ற படத்திற்கு பிறகு, அதாவது 15 ஆண்டுகளுக்குப் பின்னர் ஷோபனாவும், சுரேஷ்கோபியும் இணையும் படம் இதுவாகும். தற்போது நாடாளுமன்ற தேர்தலில் சுரேஷ்கோபி போட்டியிடுவதால், தேர்தல் முடிந்த பிறகு இந்தப் படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.


Next Story