சினிமா செய்திகள்

தேர்தலில் யாருக்கு ஓட்டு? - இயக்குனர்கள் பார்த்திபன், சேரன், முருகதாஸ் கருத்து + "||" + Whom do you vote for in the election? - Directors Parthiban, Cheran, Murugadoss comment

தேர்தலில் யாருக்கு ஓட்டு? - இயக்குனர்கள் பார்த்திபன், சேரன், முருகதாஸ் கருத்து

தேர்தலில் யாருக்கு ஓட்டு? - இயக்குனர்கள் பார்த்திபன், சேரன், முருகதாஸ் கருத்து
தேர்தலில் யாருக்கு ஓட்டு போடுவது என்பது குறித்து இயக்குனர்கள் பார்த்திபன், சேரன், முருகதாஸ் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை நடக்கிறது. தேர்தலில் யாருக்கு ஓட்டுபோடுவது என்பது குறித்து திரையுலகினர் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

நடிகர் பார்த்திபன் டுவிட்டர் பக்கத்தில், “ஓட்டை போடாதீர்கள். ஓட்டை போடாதீர்கள். வல்லரசாக போகும் இந்தியாவின் கூகுள் வரைபடத்தில் ஓட்டை போடாதீர்கள். தேர்தல் வந்திடுச்சி. துட்டுக்கு ஓட்டை போட்டு நம் பிள்ளைகளின் ஆரோக்கிய வாழ்வில் ஓட்டை போடாதீர்கள்.”


“பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வாதிகளுக்கு தேர்தல் தேத்துதல் (பணம்). வஞ்சரத்தை வாங்கிக்கொண்டு நெத்திலியை உங்களுக்கு வீசுகிறார்கள். அதுகூட திமிங்கல வேட்டைக்கே. காசு வாங்காமல் ஓட்டு போடுவோம். மேலிடத்தில் ரூபாய் வாங்காத கட்சிக்கு” என்று கூறியுள்ளார்.

டைரக்டர் சேரன் டுவிட்டர் பக்கத்தில், “மக்களின் உணர்ச்சிகளை தூண்டி கொதிப்படைய செய்து வாக்கு சேகரிப்பதும் ஒரு வகையில் தவறான அணுகுமுறைதான். பேச்சிலும் கவர்ச்சியிலும் மயங்கித்தான் 50 வருடங்கள்... நிதானமாக ஒவ்வொரு தலைவரின் உரை, இருக்கும் பிரச்சினைகள், அவர்கள் எடுத்து வைக்கும் தீர்வு என அலசுங்கள். அதுவே சரியான மாற்றம் காண வழி.

டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் டுவிட்டரில், “சுதந்திர இந்தியாவில் ஓட்டுபோட ஆசைப்பட்டு அது நிறைவேறாமல் 23 வயதில் தூக்கிலிடப்பட்டார் பகத் சிங் என்னும் இளைஞன். அந்த ஓட்டு இப்போது உன் கையில் இளைஞனே மறந்து விடாதே” என்று பதிவிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ‘தேர்தலுக்கு சம்பந்தம் இல்லாததை பா.ஜனதா தலைவர்கள் பேசுகிறார்கள்’ - ராஜ்தாக்கரே தாக்கு
தேர்தலுக்கு சம்பந்தம் இல்லாத பிரச்சினைகளை பா.ஜனதா தலைவர்கள் பேசுவதாக ராஜ்தாக்கரே கூறினார்.
2. சட்டமன்றத்துக்கு வராமல் வாட்ச் கடையில் உட்கார்ந்திருப்பார்: தேர்தல் நேரத்தில் மட்டும்தான் மக்களை தேடி வருவார் - ரங்கசாமி மீது நாராயணசாமி தாக்கு
சட்டமன்றத்துக்கு வராமல் வாட்ச் கடையில் உட்கார்ந்திருப்பார், தேர்தல் நேரத்தில் மட்டும்தான் ரங்கசாமி மக்களை தேடி வருவார் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
3. தேர்தல் முடிவு எதுவானாலும் மக்களின் தீர்ப்பை ஏற்போம் - கண்ணன் சொல்கிறார்
தேர்தல் முடிவு எதுவானாலும் மக்களின் தீர்ப்பை ஏற்போம் என்று மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கண்ணன் கூறினார்.
4. தேர்தலுக்கு பின் பா.ஜ.க. அல்லாத ஆட்சி அமைக்க மாநில கட்சிகளுடன் பேச்சு நடத்த தயார்; இந்திய கம்யூனிஸ்டு கட்சி
தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க. அல்லாத ஆட்சி அமைக்க மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூறியுள்ளது.
5. 5 ஆண்டுகளில் 3 கட்சிகள் மாறியவரா உங்களுக்கு நன்மை செய்வார்? தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி மீது எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு
5 ஆண்டுகளில் 3 கட்சிகள் மாறியவரா உங்களுக்கு நன்மை செய்வார்? என அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க.வேட்பாளர் செந்தில்பாலாஜி மீது எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடி பேசினார்.