சினிமா செய்திகள்

ஆகஸ்டில் வெளிவரும் சூர்யாவின் ‘காப்பான்’ + "||" + Surya 'Kappan' Will be released in August

ஆகஸ்டில் வெளிவரும் சூர்யாவின் ‘காப்பான்’

ஆகஸ்டில் வெளிவரும் சூர்யாவின் ‘காப்பான்’
சூர்யாவின் ‘காப்பான்’ திரைப்படம் ஆகஸ்டில் வெளிவர உள்ளது.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, ஆர்யா, மோகன்லால், சாயிஷா ஆகியோர் நடித்துள்ள படம் காப்பான். இந்த படத்தின் டிரெய்லர் சமூக வலைத்தளத்தில் வெளியாகி லட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றுள்ளது. அரசியல், பயங்கரவாதம் பற்றிய காட்சிகள் டிரெய்லரில் உள்ளன.

விவசாயியாக வரும் சூர்யா, நாட்டில் நடக்கும் பிரச்சினைகள் குறித்து ஆவேசமாக பேசுகிறார். “இயற்கையாக உற்பத்தியாகும் நதியை தனக்குத்தான் சொந்தம் என்று உரிமை கொண்டாடும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது” என்று ஆவேசமாக பேசுகிறார். விவசாயிகள் போராட்டம் கலவரமாக மாறி பலர் ரத்த வெள்ளத்தில் மிதக்கும் காட்சிகளும் டிரெய்லரில் உள்ளன.

சூர்யா உழவு மாடுகளை பிடித்தபடி ஏர் கலப்பையுடன் வரும் காட்சியும் உள்ளன. படத்தில் மோகன்லால் பிரதமராக நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. ‘சியாச்சின், கார்க்கில் அடுத்து சர்ஜிக்கல் அட்டாக். இதைத்தான் விரும்புகிறதா? உங்கள் பாகிஸ்தான் என்று மோகன்லால் கோபமாக பேசும் வசனமும் உள்ளது.

சாயிஷாவின் காதலராக வரும் ஆர்யா தமிழ்நாட்டை பாலைவனமாக்கி விட்டு இந்தியாவை சூப்பர் பவர் ஆக்கப்போகிறீர்களா? என்று கேள்வி எழுப்புகிறார். பாதுகாப்பு அதிகாரியாகவும் சூர்யா அதிரடி சண்டை போடுகிறார். எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படம் ஆகஸ்டில் திரைக்கு வருகிறது.தொடர்புடைய செய்திகள்

1. காப்பான்
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, சாயிஷா, ஆர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் காப்பான் படத்தின் முன்னோட்டம்.
2. கேரளாவில் சூர்யாவின் ‘காப்பான்’ படத்துக்கு தடை?
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள காப்பான் படத்தை அடுத்த மாதம் 20-ந்தேதி கேரளாவில் 200 தியேட்டர்களில் திரையிட ஏற்பாடுகள் நடக்கின்றன.
3. புதிய கல்விக்கொள்கை குறித்து கருத்து நடிகர் சூர்யாவுக்கு, வைகோ பாராட்டு
புதிய கல்விக்கொள்கை குறித்து கருத்து தெரிவித்த நடிகர் சூர்யாவுக்கு, வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். புதிய கல்விக்கொள்கை குறித்து கருத்து தெரிவித்த நடிகர் சூர்யாவுக்கு, வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...