சினிமா செய்திகள்

ரஜினியின் தர்பாரில் புதிய வில்லன் + "||" + Rajini darbar is the new villain

ரஜினியின் தர்பாரில் புதிய வில்லன்

ரஜினியின் தர்பாரில் புதிய வில்லன்
ரஜினியின் தர்பாரில் புதிய வில்லன் நடிகர் ஒருவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா வருகிறார். ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார். ஏற்கனவே பாபநாசம் படத்தில் கமல்ஹாசன் மகளாக இவர் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தர்பார் படத்தில் நடிக்கும் வில்லன்கள் தேர்வு நடந்து வருகிறது. இந்தி நடிகர் பிரதிக் பாபரை வில்லன் கதாபாத்திரத்துக்கு ஒப்பந்தம் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் 2015-ல் வெளியான ‘பாகி’ 2 படத்தில் வில்லனாக நடித்து பரபரப்பாக பேசப்பட்டார். ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளும் கிடைத்தன.

அந்த படத்தில் அவரது நடிப்பை பார்த்து வியந்து தர்பார் படத்துக்கு ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்பந்தம் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. தர்பார் படத்தில் பிரதிக் பாபர் மும்பையை ஆட்டி வைக்கும் தாதாவின் மகனாக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் நடிகர், நடிகைகள் தேர்வு தொடர்ந்து நடக்கிறது.

மும்பையில் 3 மாதங்கள் தொடர்ச்சியாக தர்பார் படப்பிடிப்பு நடக்க உள்ளது. பொங்கல் பண்டிகையன்று படத்தை திரைக்கு கொண்டு வருகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு
தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது.
2. தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரை கமல்ஹாசன், சல்மான்கான், மோகன்லால் வெளியிடுகிறார்கள்
4 மொழிகளில் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரை கமல்ஹாசன், சல்மான்கான், மோகன்லால் ஆகியோர் வெளியிடுகிறார்கள்.
3. ரஜினிக்கு மத்திய அரசு விருது வழங்கியது குறித்து சீமான் விமர்சிப்பது சரியல்ல - கருணாஸ் எம்.எல்.ஏ. பேட்டி
ரஜினிக்கு மத்திய அரசு விருது வழங்கியது குறித்து சீமான் விமர்சிப்பது சரியல்ல என்று கருணாஸ் எம்.எல்.ஏ. கூறினார்.
4. பொங்கல் பண்டிகையில் ரஜினி, கார்த்தி படங்கள் மோதல்
தீபாவளிக்கு விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி படங்கள் திரைக்கு வந்து இரண்டுமே நல்ல வசூல் பார்த்தன.
5. நவம்பர் 7-ந் தேதியும், டிசம்பர் 12-ந் தேதியும்...
கமல்ஹாசனின் பிறந்த நாள் அன்று ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ படத்தின் ‘போஸ்டர்’ வெளியிடப்படுகிறது.