சினிமா செய்திகள்

தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரி: ரத்து செய்ய சென்னை ஐகோர்ட்டில் நடிகர் விஷால் வழக்கு + "||" + Managing the Producers Association Individual officer To cancel In the Chennai High Court Actor Vishal's case

தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரி: ரத்து செய்ய சென்னை ஐகோர்ட்டில் நடிகர் விஷால் வழக்கு

தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரி: ரத்து செய்ய சென்னை ஐகோர்ட்டில் நடிகர் விஷால் வழக்கு
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க நியமிக்கப்பட்ட அரசு தனி அதிகாரி சேகரின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டுமென சென்னை ஐகோர்ட்டில் விஷால் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை

தயாரிப்பாளர் சங்கத்திற்கு விஷால்  தலைமையிலான அணி நிர்வாகத்திற்கு வந்த பிறகு வாக்குறுதி அளித்தபடி அந்த  நிர்வாகம் செயல்படவில்லை என எதிர்தரப்பினர் குற்றம்சாட்டி வந்தனர். பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து புகார் ஒன்றை சங்க நிர்வாகிகளிடம் அளித்தனர்.

தயாரிப்பாளர் சங்கத்திடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால், பதில் சரிவர இல்லாத காரணத்தால் தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகப் பொறுப்பை  தமிழக அரசே ஏற்று ஒரு தனி அதிகாரியை நியமித்தது.

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து சங்க தலைவர் விஷால் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். அதில் எந்த முறைகேடும் நடைபெறாத நிலையில், தனிஅதிகாரி நியமித்தது சட்டப்படி தவறு என கூறி உள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.