சினிமா செய்திகள்

‘அகம்பாவம்’ படத்தில்நமீதாவுக்கும், அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் யுத்தம் + "||" + The war between Namitha and the politician

‘அகம்பாவம்’ படத்தில்நமீதாவுக்கும், அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் யுத்தம்

‘அகம்பாவம்’ படத்தில்நமீதாவுக்கும், அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் யுத்தம்
ஒரு பெண் போராளிக்கும், சாதியை வைத்து அரசியல் நடத்தும் ஒரு மோசமான அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் யுத்தத்தை கருவாக வைத்து, ‘அகம்பாவம்’ என்ற படம் தயாராகிறது.
‘அகம்பாவம்’  படத்தில், போராளியாக நமீதா நடிக்கிறார். திருமணத்துக்குப்பின் நமீதா நடிக்கும் முதல் படம், இது. கதாநாயகனாக வினோத், கதாநாயகியாக சமீரா சாய் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்.

நமீதாவின் கணவராக பிர்லா போஸ்சும், போலீஸ் வேடத்தில் சேரன்ராஜும் நடிக்கிறார்கள். இவர்களுடன் மனோபாலா, மாரிமுத்து, அப்புக்குட்டி, ஜாக்குவார் தங்கம், பாண்டிராஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். கதை-திரைக்கதை-வசனம் எழுதி, வில்லனாக நடித்து தயாரித்தும், இயக்கியும் வருகிறார், வாராகி. இவர், ‘சிவா மனசில புஷ்பா’ என்ற படத்தை இயக்கியவர்.

கோலி சோடா, சண்டி வீரன் ஆகிய படங்களுக்கு இசையமைத்த அருணகிரி, இந்த படத்துக்கு இசையமைக்கிறார். முதல் கட்ட படப்பிடிப்பு, சென்னையில் நடந்தது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஏற்காடு சுற்றுவட்டாரங் களில் நடைபெற்றது. அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.”