மது போதையில் ஓட்டல் கார்டனில் உறங்கிய நடிகை டாப்சி


மது போதையில் ஓட்டல் கார்டனில் உறங்கிய நடிகை டாப்சி
x
தினத்தந்தி 8 May 2019 1:37 PM IST (Updated: 8 May 2019 4:21 PM IST)
t-max-icont-min-icon

மது போதையில் ஓட்டல் கார்டனில் உறங்கிய நடிகை டாப்சி. அவரே தகவல் வெளியிட்டு உள்ளார்.

நடிகை டாப்ஸி பன்னு தமிழில் தனுஷின்  ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தியில் பிங்க் படத்தில் அமிதாப்பச்சனுடன் நடித்தார்.   தற்போது அக்‌ஷய்குமாருடன் இணைந்து மிஷன் மங்கள் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நடிகை டாப்ஸி மற்றும் விக்கி கௌஷல், கடந்த ஆண்டு வெளியான மன்மர்ஜியான் படம் குறித்த நினைவுகளையும், பட விழாவில் நடந்த சுவாரஸ்யங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

மன்மர்ஜியான் படப்பிடிப்பு முடிவடைந்து அதற்கான பார்ட்டியில் படக்குழுவினருடன் நடிகை டாப்ஸியும் கலந்து கொண்டுள்ளார். இரவில் நடந்த அந்த பார்ட்டியில் நடிகர் விக்கி கௌஷலுடன் இணைந்து நடிகை டாப்ஸி மது அருந்தியுள்ளார்.

அளவுக்கு அதிகமாக குடித்ததால் இருவரும் அந்த ஓட்டல் கார்டனிலேயே உறங்கியுள்ளனர். இதை நடிகை டாப்ஸி ஆங்கில ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில் விவரித்துள்ளார்.

கார்டனில் உறங்கிய நடிகை டாப்ஸியை அங்கிருந்து அழைத்துச் செல்ல முயன்றதாக அவருடன் இருந்த நடிகர் விக்கி கௌஷல் அதே பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் வருண் தவானுடன் நடித்த அனுபவங்களையும் டாப்ஸி பகிர்ந்து கொண்டார்.

Next Story