2 வருடம் கழித்து ஷேவ் செய்த நடிகர் மாதவன்
நடிக்கும் சினிமாவுக்காக நடிகர் மாதவன் 2 வருடம் கழித்து ஷேவ் செய்துள்ளார்.
நடிகர் மாதவன் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். அவரது தோற்றத்திற்கு மாறுவதற்காக நீண்ட காலமாக முடி மற்றும் தாடியை வளர்த்து வந்தார்.
'மாதவனா இது?' என ரசிகர்கள் கேள்வி கேட்கும் அளவுக்கு வெள்ளை முடி மற்றும் தாடியுடன் புதிய கெட்டப்புக்கு மாறினார் மாதவன்.
ஷூட்டிங்கின் ஒருபகுதி தற்போது முடிந்துவிட்ட நிலையில் நடிகர் மாதவன் இரண்டு வருடங்கள் கழித்து ஷேவ் செய்துள்ளார். இளம் நம்பி நாராயணன் ரோலுக்கு தான் மாதவன் தாடியை நீக்கி இளமை தோற்றத்திற்கு மாறியுள்ளார். ஷூட்டிங் பிரான்ஸ் நாட்டில் நடக்கிறது. புதிய கெட்டப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மாதவனின் அர்ப்பணிப்பை வியந்து பாராட்டி வருகின்றனர்.
Shaved after 2 years🙈🙈😂😂 and the young NAMBI NARAYANAN is ready to go to France and win them over. #shaversremorse#Rocketrythefilm#Rocketryfilm rocketryfilm #filminginfrance#filminginserbia#vijaymoolan… https://t.co/aXBiatILls… pic.twitter.com/ei2cuRt5cS
— Ranganathan Madhavan (@ActorMadhavan) May 12, 2019
Related Tags :
Next Story