காரில் குடிபோதையில் சென்று நடிகை பூஜா ஹெக்டே போலீசில் சிக்கினாரா?


காரில் குடிபோதையில் சென்று நடிகை பூஜா ஹெக்டே போலீசில் சிக்கினாரா?
x
தினத்தந்தி 14 May 2019 4:15 AM IST (Updated: 14 May 2019 1:12 AM IST)
t-max-icont-min-icon

நடிகை பூஜா ஹெக்டே காரில் குடிபோதையில் சென்று போலீசில் சிக்கியதாக தகவல் பரவியது.

தமிழில் ஜீவாவுடன் முகமூடி படத்தில் நடித்த பூஜா ஹெக்டே தெலுங்கு, இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ஒரு படத்துக்கு ரூ.2 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல். மகேஷ்பாபுவுடன் நடித்த மகரிஷி என்ற தெலுங்கு படம் தற்போது திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் மகரிஷி படக்குழுவினர் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றனர். அப்போது பூஜா ஹெக்டே அளவுக்கு அதிகமாக மது அருந்தி காரில் சென்றதாகவும் காரை ஓட்டிய டிரைவரும் மதுகுடித்து இருந்ததாகவும் காரை போலீசார் பறிமுதல் செய்து, டிரைவரின் லைசென்சை ரத்து செய்துவிட்டதாகவும் இணையதளங்களில் தகவல் பரவியது.

இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பூஜா ஹெக்டே சார்பில் அவரது மானேஜர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “பூஜா ஹெக்டே பற்றி இணையதளங்களில் வதந்தி பரவி உள்ளது. இதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பூஜா ஹெக்டே குடிபோதையில் கார் ஓட்டி சிக்கி இருந்தால் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இருப்பார்கள். ஆனால் அப்படி எந்த வழக்கும் இல்லை. யாரோ இந்த வதந்தியை கிளப்பி விட்டுள்ளனர். இதுபோல் தொடர்ந்து வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Next Story