சினிமா செய்திகள்

நடிகர் சங்க தேர்தலில் விஷாலுக்கு எதிராக புதிய அணிபட விழாவில் ஆர்.கே.சுரேஷ் பேச்சு + "||" + Vishal Against New team RK Suresh Speech

நடிகர் சங்க தேர்தலில் விஷாலுக்கு எதிராக புதிய அணிபட விழாவில் ஆர்.கே.சுரேஷ் பேச்சு

நடிகர் சங்க தேர்தலில் விஷாலுக்கு எதிராக புதிய அணிபட விழாவில் ஆர்.கே.சுரேஷ் பேச்சு
நடிகர் சங்க தேர்தலில் விஷாலுக்கு எதிராக புதிய அணியை உருவாக்கி வருகிறோம் என்று பட விழாவில் ஆர்.கே.சுரேஷ் பேசினார்.
ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’. அர்சிதா ஸ்ரீதர், நேகா சக்சேனா, ரத்னவேலு ஆகியோரும் நடித்துள்ளனர். மஞ்சித் திவாகர் இயக்கி உள்ளார். அப்துல் லத்தீப் வடுகோட் தயாரித்துள்ளார். படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் ஆர்.கே.சுரேஷ் பேசியதாவது:–

நடிகர் சங்க தேர்தலில் விஷாலை தவிர்த்து மற்ற அனைவருக்கும் எனது ஆதரவு உண்டு. உதயா உள்ளிட்ட பலரும் இணைந்து விஷாலுக்கு எதிராக புதிய அணியை உருவாக்கி வருகிறோம். விஷால் தனக்கு யார் தேவையோ அவர்களை பயன்படுத்திக்கொள்வார். அவருக்கு நெருக்கமாக இருந்தவர்கள் பிரிந்துவிட்டனர். 

நடிகர் சங்கத்தில் நாடக கலைஞர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவில்லை. எங்கள் அணி தேர்தலில் வென்று பொறுப்புக்கு வந்தால் தென்னிந்திய நடிகர் சங்கம் பெயரை தமிழ் நடிகர் சங்கம் என்று மாற்றுவோம். எனது பில்லா பாண்டி கதை நன்றாக இல்லை. அதனால் ஓடவில்லை என்று விஷால் சொன்னது வருத்தமாக இருந்தது. 

நான் நடித்துள்ள ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’ படத்தில் சமூகத்துக்கு தேவையான கருத்து உள்ளது. பொள்ளாச்சி சம்பவங்களை பிரதிபலிக்கும் காட்சிகளும் உள்ளன. பெண்கள் தங்களை எப்படி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற கருவும் இருக்கிறது. மலையாளத்தில் எடுத்த இந்த படத்தை தமிழிலும் கொண்டு வருகிறோம். மலையாளத்தில் தமிழ் நடிகர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.’’

இவ்வாறு ஆர்.கே.சுரேஷ் பேசினார்.