சினிமா செய்திகள்

தெலுங்கு பட உலகில் பரபரப்பு : சமந்தா கர்ப்பமாக இருக்கிறாரா? + "||" + Sensation in the Telugu film industry: Samantha is pregnant?

தெலுங்கு பட உலகில் பரபரப்பு : சமந்தா கர்ப்பமாக இருக்கிறாரா?

தெலுங்கு பட உலகில் பரபரப்பு :  சமந்தா கர்ப்பமாக இருக்கிறாரா?
தமிழ், தெலுங்கு பட உலகில் பிரபல கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர், சமந்தா. இவர் தெலுங்கு பட உலகின் இளம் கதாநாயகர்களில் ஒருவரான நாகசைதன்யாவை கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்குப்பின் சமந்தா நடிப்பாரா, மாட்டாரா? என அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், தொடர்ந்து அவர் படங்களில் நடிக்க தொடங்கினார். பொதுவாக திருமணம் செய்துகொண்ட கதாநாயகிகள் பட உலகில், ‘மார்க்கெட்’ இழந்து விடுவார்கள். ஆனால், அதற்கு நேர்மாறாக சமந்தாவின் ‘மார்க்கெட்’ உச்சத்தில் இருக்கிறது.

இந்த நிலையில், அவர் கர்ப்பமாக இருப்பதாக தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த தகவல் காட்டுத்தீ போல் பரவியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமந்தா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஆக்ரோஷமான கருத்தை பதிவிட்டு இருக்கிறார்.

அதில், “நீங்கள் கண்டுபிடித்தால், தயவு செய்து எனக்கும் சொல்லுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அவர் கர்ப்பமாக இல்லை என்பது தெளிவாகி இருக்கிறது.

இந்த டுவிட்டர் பதிவு வெளியாகும் வரை சமந்தாவின் ரசிகர்கள் அமைதியாக இருந்தனர். டுவிட்டர் பதிவை பார்த்துவிட்டு, அவருடைய ரசிகர்கள் தெலுங்கு ஊடகங்களுக்கு எதிராக கருத்துகளை பதிவிட்ட வண்ணம் இருக்கின்றனர்.