சினிமா செய்திகள்

எல்லா மொழிகளிலும் முன்னணி ஹீரோ, ஹீரோயின்களுடன் நடிக்க ஆசை - ராதிகா ஆப்தே + "||" + In all languages Leading hero, with heroines Desire to act Radhika Apte

எல்லா மொழிகளிலும் முன்னணி ஹீரோ, ஹீரோயின்களுடன் நடிக்க ஆசை - ராதிகா ஆப்தே

எல்லா மொழிகளிலும் முன்னணி ஹீரோ, ஹீரோயின்களுடன் நடிக்க ஆசை - ராதிகா ஆப்தே
எல்லா மொழிகளிலும் முன்னணி ஹீரோ, ஹீரோயின்களுடன் நடிக்க ஆசைப்படுகிறேன் என நடிகை ராதிகா ஆப்தே கூறி உள்ளார்.
மும்பை,

பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் பிசியாக வலம் வரும் இந்திய நடிகை ராதிகா ஆப்தே, தான் தன்னை ஒரு வெற்றி பெற்ற நாயகியாக கருதவில்லை என தெரிவித்துள்ளார்!

ரஜினி நடிப்பில் உருவான கபாலி, டோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா போன்ற தமிழ் படங்களில் நடித்திருப்பவர் ராதிகா ஆப்தே. இந்தி மற்றும் ஆங்கில படங்களில் தற்போது நடித்து வருகிறார். பிரிட்டிஷ், அமெரிக்க படமாக உருவான 'தி வெட்டிங் கெஸ்ட்' படத்தில் நடித்ததுடன் 'வேர்ல்டு வார் 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

கோலிவுட், பாலிவுட் தாண்டி ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் போதிலும் தான் நினைத்தபடி இன்னும் வெற்றி எட்டவில்லை என தனது ஆதங்கத்தை வெளியிட்டிருக்கிறார். 

இதுபற்றி அவர் கூறியதாவது:- 

"நான் நடித்திருக்கும் 'தி வெட்டிங் கெஸ்ட்' படம் சமீபத்தில் அமெரிக்காவில் வெளியானது.

இதை அடுத்து மேலும் சில ஹாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. அதற்கான ஸ்கிரிப்ட்களை படித்து வருகிறேன். புதிய படத்தில் நடிப்பது பற்றி விரைவில் முடிவு செய்வேன். எல்லா மொழிகளிலும் முன்னணி ஹீரோ, ஹீரோயின்களுடன் நடிக்க ஆசைப்படுகிறேன். என்னை பொறுத்தவரை மற்றவர்கள் வெற்றி என்று எதை நினைக்கிறார்களோ அதில் இருந்து நான் நினைக்கும் வெற்றி மாறுபட்டதாக இருக்கின்றது.

இன்றுவரை நான் என்னை வெற்றி பெற்ற ஹீரோயினாக உணரவில்லை. என் மனதுக்குள் என்ன நினைத்திருக்கிறேனோ அந்த சாதனையை இன்னும் செய்ய வில்லை. அதற்கான நேரம் வரும்போதுதான் நான் வெற்றி பெற்றதாக உணர்வேன்" என  கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் அஜித்தின் முதல் செல்பி- ரசிகர்கள் மகிழ்ச்சி
நடிகர் அஜித்தின் முதல் செல்பி புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
2. நடிகர் ரஜினிகாந்த் மனைவி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
குழந்தையை பெண்ணொருவர் கொடூரமாக அடித்து துன்புறுத்தும் வீடியோ ஒன்றை ரஜினிகாந்த் மனைவி வெளியிட்டு வீடியோவில் உள்ள பெண் குறித்த தகவலை தெரிவிக்க கோரியுள்ளார்.
3. கடாரம் கொண்டான் படத்தை விக்ரம் ரசிகர்களுடன் பார்த்து ரசித்தார்
கடாரம் கொண்டான் படத்தை விக்ரம் தனது மகன் துருவ் உடன் இணைந்து சென்னை காசி திரையரங்கிற்கு சென்று முதல் நாள் முதல் காட்சி பார்த்து ரசித்தார்.
4. நடிகர் விவேக்கின் தாயார் காலமானார்!
நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் (வயது 86) இன்று மாரடைப்பால் சென்னையில் காலமானார்.
5. லீக்கான விஜய்யின் 'பிகில்' பாடல்: அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிகில் படத்தின் இண்ட்ரோ பாடல் இணையத்தில் வெளியாகிப் படக்குழுவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.