சினிமா செய்திகள்

படப்பிடிப்பில் புகுந்து நடிகையை தாக்கிய 3 பேர் கைது + "||" + Enter Into the shoot, 3 arrested for assaulting actress

படப்பிடிப்பில் புகுந்து நடிகையை தாக்கிய 3 பேர் கைது

படப்பிடிப்பில் புகுந்து நடிகையை தாக்கிய 3 பேர் கைது
படப்பிடிப்பில் புகுந்து நடிகையை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பிரபல இந்தி நடிகை மஹி ஹில். இவர் சல்மான்கானின் தபாங் தபாங்-2, மிர்ச்சி, சஞ்சீர், புல்லட் ராஜா, அனுராக் காஷ்யப் இயக்கிய தேவ்.டி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது பிக்சர் என்ற இணையதள தொடரில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மும்பை காட்பண்டர் சாலையில் உள்ள தொழிற்சாலையில் நடந்து வந்தது.

இந்த படப்பிடிப்பு தளத்துக்குள் சில ரவுடிகள் புகுந்து நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களை தாக்கினார்கள். நடிகை மஹி ஹில் மீதும் அடி விழுந்தது. மேலும் சில பெண் கலைஞர்களும் தாக்கப்பட்டனர். படப்பிடிப்பு நடைபெறும் இடம் எங்களுக்கு சொந்தமானது. இங்கு படப்பிடிப்பை நடத்தக்கூடாது என்று மிரட்டல் விடுத்தபடி மரக்கட்டைகளால் தாக்கினர்.

இதில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் துடியாவின் மண்டை உடைந்து. இயக்குனருக்கு தோள்பட்டை இறங்கியது. இந்த சம்பவம் குறித்து மஹி ஹில் கூறும்போது, “போதையில் வந்த ரவுடி கும்பல் எங்களை தாக்கினர். நான் வேனில் ஏறி கதவை மூடிக்கொண்டேன். வேனையும் அடித்து நொறுக்கினார்கள்” என்றார்.

ரவுடிகள் தாக்கிய வீடியோவை தயாரிப்பாளர் ஏக்தா கபூர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இந்த நிலையில் மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்நாவிசை படக்குழுவினர் சந்தித்து புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டதாக கிருஷ்ண சோனார், சோனு தாஸ், சுராஜ் ஷர்மா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நங்கவள்ளியில் பயங்கரம்: ஜவுளிக்கடை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு
நங்கவள்ளியில் ஜவுளிக்கடைக்குள் புகுந்து உரிமையாளரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிஓடிய 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இதனிடையே அவர்களை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். கடைகளும் அடைக்கப
2. கோவை குனியமுத்தூரில், இந்து முன்னணி பிரமுகர் மீது தாக்குதல் - 4 பேருக்கு வலைவீச்சு
கோவை குனியமுத்தூரில் இந்து முன்னணி பிரமுகரை தாக்கிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறியதாவது:-
3. சுங்க கட்டண ஊழியர்களை தாக்கிய பா.ஜனதா எம்.பி.யின் பாதுகாவலர்கள் - வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு
பா.ஜனதா எம்.பி.யின் பாதுகாவலர்கள், சுங்க கட்டண ஊழியர்களை தாக்கினர். மேலும் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் மீது தாக்குதல்; பாகிஸ்தான் கடும் கண்டனம்
ஆப்கானிஸ்தானில் தலீபான் படையினர் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்து உள்ளது.
5. புதுக்கோட்டை மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் 4 பேர் காயம்; விசைப்படகு சேதம்
கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கினார்கள். மேலும் அவர்களுடைய விசைப்படகையும் சேதப்படுத்தினார்கள். இந்த தாக்குதலில் 4 மீனவர்கள் காயமடைந்தனர்.