சினிமா செய்திகள்

சங்க தவறுகளை தட்டிக்கேட்கவே போட்டியிடுகிறேன்; நடிகர் பாக்யராஜ் பேச்சு + "||" + I compete only to ask about association mistakes; Actor Bhagyaraj talks

சங்க தவறுகளை தட்டிக்கேட்கவே போட்டியிடுகிறேன்; நடிகர் பாக்யராஜ் பேச்சு

சங்க தவறுகளை தட்டிக்கேட்கவே போட்டியிடுகிறேன்; நடிகர் பாக்யராஜ் பேச்சு
சங்க தவறுகளை தட்டிக்கேட்கவே போட்டியிடுகிறேன் என்று நடிகர் பாக்யராஜ் பேசியுள்ளார்.
தென்சென்னை மாவட்ட பதிவாளர் நாளை நடைபெற இருந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை நிறுத்த அண்மையில் உத்தரவிட்டிருந்தார் . ஆனால், இதை எதிர்த்து விஷாலின் பாண்டவர் அணி சென்னை ஐகோர்ட்டில்  மேல்முறையீடு செய்தது. இதை தொடர்ந்து  தேர்தல் சொன்ன தேதியில் நடைபெற சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்தது.  நடிகர் சங்க தேர்தலுக்கு போலீசார் பாதுகாப்பு வழங்கும்படி நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பாண்டவர் அணியினர்  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசினர்.  அப்போது,  நடிகர் சங்க தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டனர்.

இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நடிகர் பாக்யராஜ் கலந்து கொண்டார்.  அவர் பேசும்பொழுது, வெற்றி, தோல்வியை நினைத்து தேர்தலில் போட்டியிடவில்லை, சங்கத்தில் தவறு நடைபெறுவதை தெரிந்து, அதை தட்டிக்கேட்கவே போட்டியிடுகிறேன் என பேசினார்.