சினிமா செய்திகள்

இரட்டை வேடங்களில், தனுஷ்! + "||" + In double roles, Dhanush!

இரட்டை வேடங்களில், தனுஷ்!

இரட்டை வேடங்களில், தனுஷ்!
தனுஷ் கை நிறைய படங்களை வைத்து இருக்கிறார். இருப்பினும், சிறந்த கதையம்சம் கொண்ட பட வாய்ப்பு வந்தால், அதை தவிர்ப்பதில்லை.
அந்த வகையில் அவர் இப்போது, துரை செந்தில்குமார் டைரக்‌ஷனில் ஒரு புதிய படத்தில் நடிக்க சம்மதித்து இருக்கிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் ஏற்கனவே தனுசை வைத்து, ‘தொடரி’ என்ற படத்தை தயாரித்தது.

துரை செந்தில்குமார் டைரக்டு செய்யும் புதிய படத்தில், தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மெஹ்ரீன் பிர்சடா நடிக்கிறார். இவர் இப்போது, தெலுங்கு பட உலகில் பிரபல கதாநாயகியாக இருந்து வருகிறார்!