சினிமா செய்திகள்

14-வது மாடியில் வீடு வாங்கிய நடிகை தமன்னா ; சதுர அடி ரூ.80,778 + "||" + Actor Tamannaah Bhatia buys flat at Rs 80,778 per sqft, breaks record

14-வது மாடியில் வீடு வாங்கிய நடிகை தமன்னா ; சதுர அடி ரூ.80,778

14-வது மாடியில் வீடு வாங்கிய நடிகை தமன்னா ; சதுர அடி ரூ.80,778
மும்பையில் 14-வது மாடியில் சதுர அடி ரூ.80,778க்கு வீடு வாங்கியுள்ளார் நடிகை தமன்னா.
மும்பை,

மும்பையின் மேற்கு புறநகர் பகுதியில்  நடிகை ஒருவர் அதிக விலை கொடுத்து பிளாட் ஒன்று வாங்கி உள்ளார். பாகுபலி புகழ் நடிகை தமன்னா பாட்டியா சமீபத்தில் வெர்சோவாவில் சதுர அடி ரூ .80,778 க்கு ஒரு பிளாட் வாங்கி உள்ளார். இது இப்பகுதியில் உள்ள விலை விகிதத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும். அபார்ட்மெண்ட்  குடியிருப்பை பில்டர் சமீர் போஜ்வானியிடமிருந்து தமன்னா  வாங்கியுள்ளார். தரகர்களின் கூற்றுப்படி, இந்த கட்டிடத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் வரவிருக்கும் கட்டிடத்திற்கு சதுர அடி ரூ .35,000-40,000 ஆகும்.

கடந்த மாதம் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் மற்றும் செய்தித்தாள் தகவல்படி  2,055 சதுர அடி பிளாட்டிற்கு ரூ .16.60 கோடி தமன்னா செலுத்தியதாகக் காட்டுகிறது. 

அபார்ட்மெண்டிற்கான ஆயத்த கணக்கீட்டு விகிதம் ரூ.4.56 கோடி. அவர் பிளாட் பதிவு செய்வதற்கு ரூ.99.60 லட்சம் ஸ்டாம்ப் டூட்டியாக செலுத்தி உள்ளார். அவர் வாங்கிய பிளாட் ஜூஹு-வெர்சோவா இணைப்பு சாலையில் அமைந்துள்ள பேவியூ என்ற கட்டிடத்தின் 14 வது மாடியில் அமைந்துள்ளது. இந்த கட்டிடம் 22 அடுக்குமாடிகளை கொண்டது.

அவர் வாங்கிய பிளாட்டுடன் இரண்டு கார் பார்க் பகுதிகளும் கிடைத்துள்ளன. ஆவணங்களில் சமீர் போஜ்வானி விற்பனையாளராகவும், வாங்குபவராக தமன்னா பாட்டியாவும், தமன்னாவுடன் அவரது தாயார் ரஜ்னி பாட்டியாவும் வாங்குபவராக காட்டப்பட்டுள்ளது.

ஆவணங்களின் படி தமன்னாவின்  தற்போதைய முகவரியாக லோகண்ட்வாலா வளாகம் காட்டப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் விவேக்கின் தாயார் காலமானார்!
நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் (வயது 86) இன்று மாரடைப்பால் சென்னையில் காலமானார்.
2. லீக்கான விஜய்யின் 'பிகில்' பாடல்: அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிகில் படத்தின் இண்ட்ரோ பாடல் இணையத்தில் வெளியாகிப் படக்குழுவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
3. 'லிப் லாக்' முத்தம் கொடுத்தால் என்ன தவறு - நடிகை அமலாபால்
ஒரு தோழி இன்னொரு தோழிக்கு 'லிப் லாக்' முத்தம் கொடுத்தால் என்ன தவறு என நடிகை அமலாபால் கேள்வி எழுப்பி உள்ளார்.
4. நடிகை ஸ்ரீதேவி கொல்லப்பட்டாரா? முட்டாள்தனமான கதைகளுக்கு பதில் சொல்ல மாட்டேன் - போனி கபூர் பாய்ச்சல்
நடிகை ஸ்ரீதேவி கொல்லப்பட்டாரா? என கேரள டிஜிபி ரிஷிராஜ் சிங் புதிய சர்ச்சையைக் கிளப்பினார். இதுபோன்ற முட்டாள்தனமான கதைகளுக்கு பதில் சொல்ல மாட்டேன் என போனி கபூர் கூறி உள்ளார்.
5. நான் ஒரு தமிழ் பெண் என்பதால் இங்கு என்னை துன்புறுத்துகிறார்கள் - நடிகை விஜயலட்சுமி கதறல்
நான் ஒரு தமிழ் பெண் என்பதால் இங்கு என்னை துன்புறுத்துகிறார்கள் என்று நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.