சினிமா செய்திகள்

நாட்டை மாற்ற ரவுத்திரம் பழகுகிறேன் -கமல்ஹாசன் + "||" + Kamal Haasan is practicing Routram

நாட்டை மாற்ற ரவுத்திரம் பழகுகிறேன் -கமல்ஹாசன்

நாட்டை மாற்ற ரவுத்திரம் பழகுகிறேன் -கமல்ஹாசன்
ரவுத்திரம் பழகிக்கொண்டிருக்கிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் பேசினார்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 3-வது பிக்பாஸ் சீசன் தொடங்கி உள்ளது. இதில் இயக்குனர் சேரன், நடிகர் சரவணன், பாத்திமா பாபு, வனிதா விஜயகுமார், லொஸ்லியா, சாக்சி அகர்வால், மதுமிதா, கவின், அபிராமி, ஷெரின், மோகன் வைத்யா, தர்ஷன், சாண்டி, முகென் ராவ், ரேஷ்மா ஆகியோர் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர்.

முதல் நாள் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசியதாவது:-

“இது எனக்கு முக்கியமான மேடை என்பதை விட கடல் போன்ற மக்களை சென்றடைய ஒரு பாலமாகவே நினைக்கிறேன். அரசியலுக்கு போய்விட்டீர்களே? அதன்பிறகு ஏன் பிக்பாசுக்கு வருகிறீர்கள் என்ற கேள்விகள் எழுகிறது. என்னை நானாக காட்டிய ஒரு அற்புதமான மேடை. வந்தாரை வாழவைப்பது தமிழ்நாடுதான். ஆனால் நாங்களும் கொஞ்சம் வாழவேண்டும்.

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சென்ட்ரலை போட்டு தாக்குகிறேனே என்று கேட்காதீர்கள். தாக்குகிறேன் என்றால் காரணம் நிலவும் சூழல்தானே தவிர வேறொன்றுமில்லை. ஒரு தாய் மக்கள் நாமென்போம். நல்ல நாட்டை பார்த்தாலும் கோபம். நமது நாட்டை பார்த்தாலும் கோபம். ஏனென்றால் எனது நாட்டை இப்படி ஆக்கிவிட்டார்களே எனக்கோபம்.

ஷவரில் குளிப்பவர்களை பார்த்தாலும் கோபம். சாக்கடையில் தண்ணீரை கலப்பதை பார்த்தாலும் கோபம். நாட்டை மாற்ற வேண்டுமானால் கோபம் வேண்டும். ஆனால் அந்த மாற்றம் மையப்புள்ளியில் இருந்துதான் தோன்றும். அதனால்தான் நான் பாரதி சொன்னதுபோல ரவுத்திரம் பழகிக்கொண்டிருக்கிறேன்.”

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.