சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் படத்துக்கு எதிர்ப்பு + "||" + Opposition to the Sivakarthigeyan film

சிவகார்த்திகேயன் படத்துக்கு எதிர்ப்பு

சிவகார்த்திகேயன் படத்துக்கு எதிர்ப்பு
நடிகர் சிவகார்த்திகேயன் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் பட உலகில் தலைப்பை பயன்படுத்துவது தொடர்பாக அடிக்கடி மோதல்கள் நடக்கின்றன. நயன்தாரா நடித்துள்ள ‘கொலையுதிர்காலம்’ படம் தலைப்பு பிரச்சினையில் சிக்கி கோர்ட்டுக்கு சென்றதால் திட்டமிட்ட தேதியில் திரைக்கு வரவில்லை. இதுபோல் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தின் தலைப்பான ‘ஹீரோ’ என்ற பெயரை விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்துக்கும் சூட்டியுள்ளதால் பிரச்சினை எழுந்துள்ளது.

இந்த நிலையில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு ‘எங்க வீட்டுப்பிள்ளை’ என்ற தலைப்பை வைக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு எம்.ஜி.ஆர். நடித்த ‘எங்க வீட்டுப்பிள்ளை’ படத்தை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனமாக விஜயா புரொடக்‌ஷன்ஸ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

அந்த பட நிறுவனம் சார்பில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. அந்த கடிதத்தில் “எம்.ஜி.ஆர். நடித்த எங்க வீட்டுப்பிள்ளை உள்பட தங்கள் நிறுவனம் தயாரித்துள்ள அனைத்து படங்களின் தலைப்புகளின், உரிமைகளையும் இதுவரை வேறு நபர்களுக்கோ அல்லது வேறு நிறுவனங்களுக்கோ வழங்கவில்லை.

இதுகுறித்து பல ஆண்டுகளுக்கு முன்பே கடிதம் மூலம் தலைப்பு உரிமை காப்பு கோரி நமது சங்கங்களுக்கு கடிதம் கொடுத்துள்ளோம். அதே நிலை தொடர்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது. இதனால் எங்க வீட்டு பிள்ளை தலைப்பை சிவகார்த்திகேயன் படத்துக்கு பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.